Home NEWS நீட் தேர்வில் தமிழகத்தில் முதல் இடம் பிடித்த திருப்பூர் மாணவர்..!!! குவியும் வாழ்த்துக்கள்.

நீட் தேர்வில் தமிழகத்தில் முதல் இடம் பிடித்த திருப்பூர் மாணவர்..!!! குவியும் வாழ்த்துக்கள்.

NEET-EXAM-TAMILNADU-FIRST-SRIJAN

இந்தியா முழுவதும் நடந்த நீட் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு குரல்கள் கொடுத்து வருகின்றனர். நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் சில மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்றும் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தது. ஆனால் மத்திய அரசு நீட் தேர்வு நடத்தியே ஆகவேண்டும் என்று ஒரே முடிவில் திட்ட வட்டமாக இருந்தது.

நடிகர் சூர்யா முதல் அனைத்து பிரபலங்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தனர் . சமீபத்தில் பிஜேபியில் இணைந்த திரு.அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் சூர்யா நல்ல நடிகர் ஆனால் நீட் தேர்வை பற்றி அவர் எண்ணம் நீட் தேர்வின் முடிவுகள் வந்த பிறகு மாறலாம் என்று கூறியிருந்தார். அதன்படியே நீட் தேர்வில் தற்பொழுது 57. 44 % தேர்ச்சி பெற்றுள்ளார்கள் தமிழ்நாட்டில்.

இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வில் 720 க்கு 710 மதிப்பெண் பெற்று திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சார்ந்த மாணவர் ஸ்ரீஜன் என்பவர் தமிழக அளவில் முதல் இடம் பிடித்துள்ளார். நாமக்கல்லில் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்த ஸ்ரீஜன் இந்திய அளவில் எட்டாவது இடத்திலும் ஓபிசி பிரிவில் இந்திய அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார் அதனைத் தொடர்ந்து நாமக்கல்லை சார்ந்த மோகன பிரபா என்ற மாணவி 705 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்திலும் தேசிய இடத்தில் 52 வது இடத்திலும் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் தமிழ்நாட்டில் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 48.55 தேர்ச்சி விகிதம் இருந்தது ஆனால் தற்பொழுது 57 .44 % உயர்ந்திருக்கிறது. இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் ஒடிசாவை சேர்ந்த சோயப் அக்தர் என்பவர் இவர் 720 / 720 மதிப்பெண் பெற்று இந்தியாவிலேயே முதலிடம் பெற்ற மாணவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

இதனிடையே இந்திய அளவில் அரசு பள்ளிகளில் நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த ஜீவித்குமார். இவரது மதிப்பெண்கள் 664. இவர் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை நாராயணசாமி, ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி.

தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவர் ஸ்ரீஜன்க்கு பொதுமக்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version