Home NEWS மதுபானங்கள் விலை உயரப்போகுதா ??? குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி !!! விபரம் உள்ளே…

மதுபானங்கள் விலை உயரப்போகுதா ??? குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி !!! விபரம் உள்ளே…

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது ஒருநாள் தொற்றாக 33,000 மேல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மாதம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றவுடன் கொரோனா தொற்று பாதிப்புகளில் இருந்து மீண்டு வர பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு வர்த்தகங்கள், ஆலைகள், தொழிற்சாலைகள் போன்றவை செயல்படாமல் இருந்து வருகின்றது.

இந்த ஊரடங்கு போது டாஸ்மார்க் கடைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசுக்கு 15 நாட்களில் டாஸ்மார்க் கடை திறக்காததால் 2,020 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பத்திரப்பதிவு செயல்படாததால் 500 கோடி ரூபாய் மற்றும் டீசல் பெட்ரோல் வரி வருவாய் ௩௮௬ கோடி முடங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஊரடங்கு போது பெட்ரோல் டீசல் பயன்பாடுகள் 75% குறைந்துள்ளதால் தமிழக அரசிற்கு மொத்தமாக 2,900 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version