Home NEWS தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இவ்ளோ கோடி வசூலா? இதுவரை வந்துள்ள நிதி எவ்ளோ...

தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இவ்ளோ கோடி வசூலா? இதுவரை வந்துள்ள நிதி எவ்ளோ தெரியுமா!!! விபரம் உள்ளே…

கொரோனா நிவாரண பணிகளுக்கு பொது மக்களால் வழங்கப்பட்ட 69 கோடி ரூபாயில் இருந்து 50 கோடி ரூபாய் செலவிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மருத்துவ நெருக்கடியும் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அரசியல் பொருளாதாரம் முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி வழங்கும்படி இம்மாதம் 16ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

நன்கொடைகள் அனைத்தும் முழுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் நன்கொடைகள் மற்றும் செலவினங்கள் குறித்த விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்படும் என்று முதல்வர் உறுதி அளித்தார்.

முதல்வர் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் மட்டுமன்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மூலமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கி வருகின்றனர்.

நேற்று முன்தினம் வரை இணைய வலியாக 29.44 கோடி ரூபாய் நேரடியாக 31.56 கோடி ரூபாய் என மொத்தம் 69 கோடி ரூபாய் நிவாரண நிதி பெறப்பட்டுள்ளது. நிவாரண பணிகளுக்கு நன்கொடை அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் தமிழக அரசின் சார்பில் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்ட 69 கோடி ரூபாயிலிருந்து ரெம் டெசிவிர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க 25 கோடி ரூபாய் மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயில் வழியாக கொண்டு வர தேவையான கன்டெய்னர்கள் வாங்க 25 கோடி ரூபாய் என முதல் கட்டமாக 50 கோடி ரூபாய் செலவிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version