Home NEWS தமிழக அரசு கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்கள் கொடுக்க திட்டம்!!! வெளியான தகவல்கள்….

தமிழக அரசு கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்கள் கொடுக்க திட்டம்!!! வெளியான தகவல்கள்….

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கட்சி 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையை கொண்ட ஆட்சியாக திகழ்ந்து வருகிறது. தற்போது தமிழக அரசின் முதல்வரான
மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சி அமர்ந்தவுடன் பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.

தேர்தல் வாக்குறுதியாக கொரோனா நிதியாக அறிவிக்கப்பட்டிருந்த ரூ.4000 கலைஞரின் பிறந்தநாள் முன்னிட்டு வழங்க இருந்த தொகையை இந்த மே மாதம் 2,000 ரூபாயும் அடுத்த மாதம் 2,000 ரூபாய் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்திருந்தார்.

இந்த மாதம் கொரோனா நிதியாக 2000 ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது. அதைப்போல் தற்போது கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்கள் தர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளன. அந்த மளிகை பொருள்களில் கோதுமை, ரவை, சக்கரை, கடுகு, சீரகம், சோப்பு, பருப்பு, மஞ்சள் தூள் போன்ற 13 பொருட்கள் அடுத்த மாதம் ஜூன்3ம் தேதி கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு தர உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த மளிகை பொருட்களினால் 2,00,000 மேற்பட்ட குடும்பங்கள் பயன் அடைவார் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

Exit mobile version