Home CINEMA NEWS நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா..!!! 5 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய சூரரை போற்று திரைப்படம்…!!! சூர்யாவிற்கு...

நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா..!!! 5 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய சூரரை போற்று திரைப்படம்…!!! சூர்யாவிற்கு தேசிய விருது..!!!

soorarai pottru bagged 5 national awards

சூர்யாவின் சூரரைப்போற்று இந்த திரைப்படம் தியேட்டரில் வரவில்லையே என்று இன்றும் அவரது ரசிகர்கள் ஏங்கி வருகிறார்கள் அந்த அளவிற்கு சிறப்பான தரமான படத்தை சுதா கொங்கரா கொடுத்திருந்தார்.

கோபி நாத் என்பவரின் வாழ்க்கை வரலாறு எப்படி மக்களுக்கு புரிய வைக்க முடியுமோ காட்சியமைப்பில் கட்சிதமாக படத்தை எடுத்து வெளியிட்டு இருந்தார். சூர்யாவிற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நடிப்புக்கு தீனி போட்ட படமாக சூரரைப்போற்று திரைப்படம் அமைந்திருந்தது. சூரரை போற்று திரைப்படத்தை அமேசான் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. கொரோனா காலகட்டம் என்பதனால் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி மாபெரும் சாதனை படைத்தது.

சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது நிச்சயம் இவருக்கு தேசிய விருது கொடுக்கலாம் என்று ரசிகர்களே சொல்லுமளவுக்கு படம் அமைந்திருந்தது. தற்போது ரசிகர்களின் ஆசை நிறைவேறி உள்ளது என்று சொல்லலாம்.

ஆம் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பல விருதுகள் குவிந்துள்ளது தற்போது 68 தேசிய திரைப்பட விருதுகள் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகை விருது சூரரைப்போற்று படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணா முரளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

BEST BACKGROUND SCORE இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

BEST SCREENPLAY சூரரைப்போற்று இயக்குனர் சுதா கொங்கரா அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

BEST FEATURE FILM சூரரைப்போற்று படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

BEST TAMIL FILM சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் இந்த படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரரைப்போற்று குழுவினர் தேசிய விருதினை பெற்றது தமிழ் திரையுலகிற்கு பெரிய பெருமை ஒரே தமிழ் படம் இதனை தேசிய விருதுகள் வாங்குகிறது என்றால் இது சாதாரண விஷயம் அல்ல. கொண்டாடப்பட்ட வேண்டிய விஷயம்.

நாளை சூர்யாவின் பிறந்தநாளுக்கு இன்றே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் வைத்து உள்ளார் சூர்யா.

Exit mobile version