Home CINEMA NEWS அண்ணாத்த திரைப்படத்தின் மருதாணி பாடல் வெளியீடு…!!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

அண்ணாத்த திரைப்படத்தின் மருதாணி பாடல் வெளியீடு…!!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

Annathe

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. இந்தத் திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். மேலும் திரைப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் தீபாவளி விருந்தாக நவம்பர் 4 ஆம் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில் சன் பிக்சர்ஸ் புதிய அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. ஏற்கனவே அண்ணாத்த திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இன்று மாலை ஆறு மணிக்கு ரஜினி, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தயாரான மருதாணி என்னும் பாடல் வெளியாகி உள்ளது.

இப்பாடலில் ரஜினி, குஷ்பூ, மீனா உள்ளிட்டோர் நடனம் ஆடி அசத்தி உள்ளனர் ரசிகர்கள் திரைப்படத்தை காண காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Exit mobile version