Home NEWS கொரானோ காரணமாக மூன்று சலுகைகளை அறிவித்தது பாரத ஸ்டேட் வங்கி..! வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு…!

கொரானோ காரணமாக மூன்று சலுகைகளை அறிவித்தது பாரத ஸ்டேட் வங்கி..! வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு…!

கொரானோ காரணமாக வாடியுள்ள தன் வாடிக்கையாளர்களுக்கு, பாரத ஸ்டேட் வங்கி மூன்று அருமையான அறிவிப்பிகளை அறிவித்து வாடிக்கையாளர்களை குஷி படுத்தி உள்ளது.

முதல் அறிவிப்பு : ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் மக்கள் பழைய நிலைக்கு திரும்ப அவர்களின் உடனடி தேவை பணம், இதற்காக எஸ்பிஐ அவசர கடன் திட்டத்தை கொண்டுவந்துள்ளது, நாட்டிலேயே ஒரு தனி நபர் கடன் திட்டத்தை விட மிக குறைந்த வட்டியாக 10 .5 சதவீத வட்டிதான் வசூலிக்கப்போவதாக அறிவித்துள்ளது. yona sbi ஆப்பில் 567676 க்கு எஸ்எம்எஸ் அனுப்பதன் மூலம் வெறும் 45 நிமிடத்தில் 5 லட்சம் வரை கடன் பெற முடியும், மேலும் இஎம்ஐ செலுத்துவது ஆறு மதத்திற்கு மேல் தான் ஆரம்பம் ஆகும்.

இரண்டாம் அறிவிப்பு : வீட்டு கடனுக்கான எம்சிஎல்ஆர் குறைக்கப்பட்டுள்ளது, ஆண்டுக்கு 7 .40 சதவீதமாக இருந்து 7 .25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு எம்.சி.எல்.ஆர். 2020 மே 10 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகள் செலுத்தும் காலத்தை கொண்ட ரூ.25 லட்சம் வீட்டு கடனுக்கான மாதாந்திர தவணை தொகை ரூ. 255 வரை குறையும்.

மூன்றாம் அறிவிப்பு: பாரத ஸ்டேட் வங்கி குறைந்து வரும் விகிதத்திலிருந்து மூத்த குடிமகன்களை பாதுகாக்கும் வகையில் எஸ்பிஐ வீ கேர் டெபாசிட் என்ற பெயரில் சிறப்பு டெபாசிட் திட்டத்தை எஸ்பி ஐ அறிமுகம் செய்துள்ளது இதன் மூலம் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலான மூத்த குடிமக்கள் டெபாசிட் திட்டங்களுக்கு கூடுதலாக 0 .30 சதவீதம் வட்டி கிடைக்கும், அனால் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்கள் வட்டி வீதம் 0 .20 சதவீதம் குறைக்கப்படும்.

Exit mobile version