Home CRIME NEWS உணவு விற்கும் விளம்பரத்தில் சர்ச்சையாக போஸ்டர் அடித்து மாட்டிக்கொண்டார்..! போலீஸார் கைது..!

உணவு விற்கும் விளம்பரத்தில் சர்ச்சையாக போஸ்டர் அடித்து மாட்டிக்கொண்டார்..! போலீஸார் கைது..!

சென்னை தி.நகர், மகாலட்சுமி தெருவில் வசிக்கும் பிரசாந்த் என்பவர் Jain Bakeries & Confectioneries என்ற பெயரில் பேக்கரி ஒன்று நடத்தி வருகிறார். ஆன்லைனில் பேக்கரி உணவு பொருட்களை ஊரடங்கு காரணமாக விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் பிரசாந்த் அவருடைய வாட்சப் குரூப்பில் பேக்கரி குறித்து விளம்பரத்தில் “Made by jains on orders , no muslim staffs ” என்று எழுதி இருந்தார், அதாவது இந்த பொருட்கள் ஜெயின் சமூகத்தினரால் உருவாக்கப்பட்டது, முஸ்லிம்களால் இல்லை. இந்த விளம்பரம் சமூக வலை தளத்தில் பரவ ஆரம்பித்தது.

இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தினர், அதில் முஸ்லீம் மக்களால் கொரானோ பரவுகிறது என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவருகின்றன, அதனால் என் கடைகளில் முஸ்லிம்கள் வேலை பார்க்கவில்லை என்று கூறினால், மக்கள் பொருட்களை வாங்குவார்கள் என்று எண்ணி அவ்வாறு விளம்பரம் செய்ததாக கூறினார்.

இதனை அடுத்து போலீஸார் அவரை கடுமையாக எச்சரித்து வீட்டிற்கு அனுப்பினர்.

Exit mobile version