Home CINEMA NEWS 15 கிலோ எடையை குறைத்து ஆளே மாறி போன சிம்பு..!!! வேற லெவல் டெடிகேஷன்...

15 கிலோ எடையை குறைத்து ஆளே மாறி போன சிம்பு..!!! வேற லெவல் டெடிகேஷன் சிம்பு.

simbu losses weight for venthu thanidhathu kaadu

சிம்பு சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் தமிழ் சினிமாவில் தன் தந்தையின் மூலமாக அறிமுகமானவர்.

சிறுவயதிலிருந்தே நடிப்பில் அதிகம் ஆர்வம் காட்டி வந்த சிம்பு தன் தந்தையின் படமான காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த சிம்பு தனக்கென்று ரசிகர்களை கையில் வைத்திருந்தார் சிம்புவிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் மன்மதன், வல்லவன் போன்ற படங்கள் நல்ல பிசினஸ் செய்து வெற்றியும் பெற்றது.

சிம்புவும் நயன்தாராவும் தீவிரமாக காதலித்து வந்தார்கள். திடீரென்று சில பிரச்சனைகளால் சிம்புவும் நயன்தாராவும் சில வருடங்களுக்கு பிறகு பிரிந்தார்கள் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த சிம்பு படம் திடீரென்று சரிந்தது.

சிம்பு எது செய்தாலும் சர்ச்சையானது சிம்புவின் போட்டியாளர் மற்றும் நண்பரான தனுஷ் டாப் கியர் போட்டு நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து மேலே சென்று இருக்க சிம்பு மீண்டும் பிரபல நடிகை ஹன்சிகா மீது காதல் வயப்பட்டார். இரவு நேர பார்ட்டிகளில் கலந்துகொண்டு சிம்புவும் ஹன்சிகாவும் சுற்றி வந்தனர்.

சிம்புவின் நேரமோ என்னமோ இந்த காதலும் சில வருடங்கள் கழித்து முடிந்துபோனது நொந்து போன சிம்பு படங்களில் நடிப்பதில் சில ஆண்டுகள் கவனம் செலுத்தாமல் இருந்தால் தன்னைத் தானே மாற்றிக்கொண்டு சினிமாவில் மீண்டும் நடிக்க வந்தார் ஆனால் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.

உடலை கட்டுக் கோப்பாக மாற்றி மறுபடியும் பழைய கெட்டப்பில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை தற்போது வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் நடித்துவருகிறார் மாநாடு படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் இந்தப்படம் சிம்புவுக்கும் இயக்குனர் வெங்கட் பிரபுக்கும் மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என்று கூறியிருந்தார்.

சிம்பு அசுரன் தனுஷ் போல ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று நினைத்தாரோ என்னமோ கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்த காடு என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்காக ஒரே மாதத்தில் 15 கிலோ எடையை குறைத்துள்ளார். சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் சிம்புவிற்கு இனி வரும் படங்கள் கைகொடுக்குமா காத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version