Home CINEMA NEWS ஷ்ரேயாவின் முன்னழகை வர்ணித்த ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த கணவர்..!! ஷாக் ஆன ரசிகர் ..!!

ஷ்ரேயாவின் முன்னழகை வர்ணித்த ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த கணவர்..!! ஷாக் ஆன ரசிகர் ..!!

தென்னிந்திய நடிகைகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. தமிழில் இவர் ஜெயம் ரவி நடித்த மழை படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலிருந்து மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறினார். தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகளும் வந்தன.

தமிழில் முன்னணியின் நடிகர்களாக விளங்கும் விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்தார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழ்பெற்றார்.

ஆனால் அதன் பிறகு தமிழ் சினிமாவிலும் சரி மற்ற மொழி படங்களிலும் சரி ஸ்ரேயாவிற்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பல முயற்சிகள் செய்தும் ஸ்ரேயாவிற்கு பட வாய்ப்பு கிடைக்காததால் குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிவிடலாம் என்று திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் ரஷ்ய கிரிக்கெட் விரர் ஆண்ட்ரூ. தற்பொழுது ஸ்ரேயாவிற்கு அழகான ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

சமீப காலமாக மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள ஸ்ரேயா சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் நேரலையில் வந்த பொழுது ரசிகர் ஒருவர் ஸ்ரேயாவின் முன்னழகை வர்ணிக்க அதற்கு அவர் கணவர் ஆமாம் நான் உங்கள் கருத்தை ஒப்புக்கொள்கிறேன் என்பது போல பதில் அளித்துள்ளார்.

பொதுவாக பெரிய நடிகைகளை வர்ணிக்கும் போது அவர்கள் வீட்டிலும் அவர்கள் கணவன்மார்களும் கோவப்படுவதும் வழக்கம், அதற்கு மாறாக இவர் ரசிகருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version