Home NEWS மிருதன் படம் போல் “சோம்பி அட்டாக்கால்” பாதிக்கப்பட்ட அமெரிக்கா.!! பேய் உருவம் போல் சுற்றித் திரியும்...

மிருதன் படம் போல் “சோம்பி அட்டாக்கால்” பாதிக்கப்பட்ட அமெரிக்கா.!! பேய் உருவம் போல் சுற்றித் திரியும் மக்கள் கூட்டம் ..!!

ஒருவர் இறந்த பிறகு நடமாடுவது போல் இருக்கும் தோற்றம்தான் சோம்பி என்று கூறுவர். இதுபோல பல கதைகள் சினிமாவில் வந்துள்ளன. தமிழில் வெளியான ஜெயம் ரவி நடித்த மிருதன் படமும் இது மாதிரியான கதைதான். ஒருவர் இறந்து போன பிறகு மூளை கட்டுப்பாட்டை இழந்து பேயாக நடமாடுவது போல் தற்பொழுது நிஜத்தில் நடந்துள்ளது.

உலகத்தில் உள்ள வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்று அமெரிக்கா. அமெரிக்காவில் இல்லாத வளமே இல்லை என்று பலர் கூறுவர். எந்த அளவிற்கு அமெரிக்கா வளர்ச்சி அடைந்துள்ளதோ அந்த அளவிற்கு தற்பொழுது பெரும் சர்வை சந்தித்து வருகிறது. காரணம் ஸோம்பி போல் அங்கு ஆயிரக்கணக்கில் இல்லை லட்சக் கணக்கில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடு ரோட்டிலேயே சுற்றி திரிவது தான் இதற்கு காரணம்.

ஆனால் அங்கு யாரும் பேயாக சுற்றவில்லை. இதற்கு மாறாக அங்கு உள்ள மக்கள் பயன்படுத்தும் போதை பொருளால் இது மாதிரி மாறி உள்ளனர் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் போதை பொருள் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று.

இந்தியாவில் உள்ளது போல் போதை பொருள் அமெரிக்காவில் தடை இல்லை. இதனால் அனைத்து விதமான மக்களும் போதை பொருளை சர்வ சாதாரணமாக பயன்படுத்தி வருவர், இருப்பினும் மக்கள் போதை பொருளை சர்வ சாதாரணமாக பயன்படுத்தி வந்தாலும் எதில் அதிக போதை உள்ளது என அமெரிக்க அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருகளில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளனர். இதன் காரணமாக ட்ரங்க் போதை என்னும் போதை பொருளை அங்குள்ள மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி உள்ளனர்.

இதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் சுயநிழவை இழந்து நடுரோட்டில் சுற்றி திரியும் பல புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ட்ரங்க் போதை பொருள் முற்றிலும் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதை இல்லீகளாக வாங்கி உபயோகித்து அமெரிக்க மக்கள்.

விக்ரம் படத்தில் கமல் ஒரு காட்சியில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் தற்பொழுது மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக குரங்காக மாறி வருகிறான் என்பது போல இந்த போதை பொருளை உபயோகப்படுத்துவதால் மனிதனுக்கே உரித்தான ஆறாவது அறிவை அங்குள்ள மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர்.

இதன் காரணமாக ரோட்டில் தன் சுயநினைவை இழந்து கூட்டம் கூட்டமாக மக்கள் அலையும் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைத்திலும் சிறந்து விளங்கும் அமெரிக்கா போதை பொருளில் இப்படி கவனம் இல்லாமல் இருந்தது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கு என்ன தீர்வு என்று தற்பொழுது அமெரிக்கா அரசு யோசித்து வருகிறதாம்.

Exit mobile version