Home CINEMA NEWS குக் வித் கோமாளி புகழ் chef தாமு வீட்டிற்கு சென்ற சிவாங்கி..!!! தாமு அவர்களின் மகள்...

குக் வித் கோமாளி புகழ் chef தாமு வீட்டிற்கு சென்ற சிவாங்கி..!!! தாமு அவர்களின் மகள் வெளியிட்ட புகைப்படம்.

chef dhamu

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை கொடுத்தது சமீபத்தில் தான் அந்த நிகழ்ச்சியின் சீசன்2 முடிவடைந்துள்ளது.

வித்தியாசமான இந்த சமையல் நிகழ்ச்சியில் நகைச்சுவையை சேர்த்ததால் மக்கள் விரும்பி பார்த்து வந்தனர். ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் புகழின் உச்சத்துக்கு புகழ், அஸ்வின், சிவாங்கி ஆகியோர் சென்றனர்.

தற்பொழுது அஸ்வின் ட்ரைடன் ஆர்ட்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆக உள்ளார். அஸ்வினுடன் புகழும் இணைந்து நடிக்கிறார். இந்த செய்தியை அஸ்வின் தெரிவித்தவுடன் மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர். பலரை சிரிக்க வைத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மீண்டும் மறுபடியும் சீசன் 3 தொடங்கலாம் என்ற முடிவில் இருக்கிறார்களாம் விஜய் டிவி.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமடைந்த சிவாங்கி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட chef தாமோதர் அவர்களின் வீட்டுக்கு சென்று அவர் மற்றும் பல் மருத்துவரான அவரது மகளை சந்தித்துள்ளார்.

குக் வித் கோமாளி சூட்டிங்கில் நடந்த சேட்டைகளை எல்லாம் நினைவுகூர்ந்து பேசினாராம் சிவாங்கி.

செப் தாமு தாமு வீட்டில் சிவாங்கி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது மகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version