Home NEWS சசிகலாவிற்கு திடீர் உடல்நிலை குறைவு…!!! தொண்டர்களை பார்த்து கண்ணீர் விட்ட சசிகலா..!!! சின்னமாவிற்காக உருகும்...

சசிகலாவிற்கு திடீர் உடல்நிலை குறைவு…!!! தொண்டர்களை பார்த்து கண்ணீர் விட்ட சசிகலா..!!! சின்னமாவிற்காக உருகும் அவரது தொண்டர்கள்.

sasikala

27 ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது இதையடுத்து அவருக்கு பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் செலுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை சுப்ரீம் கோர்ட் விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோர் பெங்களூரு அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட ரூபாய் 10 கோடியே 10,000 அபராதத்தை 2020 ஆம் ஆண்டு செலுத்தினார் இதையடுத்து தண்டனை காலம் முடிவடைந்ததை ஒட்டி சசிகலா வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.

சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அவர்களும் கூறியிருந்தார். இன்னும் சில தினங்களில் சசிகலா விடுதலை ஆக இருக்கும் இந்த நிலையில் நேற்று சசிகலாவுக்கு சிறையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

முதலில் சிறையில் உள்ள மருத்துவமனையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர் அவருக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் நேற்று மாலை 5.40 மணியளவில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆம்புலன்ஸில் இருந்து இறங்கிய அவரை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து மருத்துவ ஊழியர்கள் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

முதலில் கொரோனா பரிசோதனை செய்து கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டபின் அவருக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட தான். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவு சீராக இருப்பது என்று தெரிய வந்தாலும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 84 சதவீதமாக இருப்பதாகவும் இதனால் தான் மூச்சுத்திணறல் அவருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பு தெரிவித்தார்கள். அதன்பின் ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளித்து உள்ளார்கள் மருத்துவர்கள்.

இதுகுறித்து சசிகலாவை சந்தித்த தினகரன் கூறியது சசிகலாவின் உடல்நிலை சீராக தற்பொழுது உள்ளது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததால் தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருந்தது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க விரும்புகிறோம் அதற்கான அனுமதி கேட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

தற்பொழுது சசிகலா வீல் சேரில் அமர்ந்து கொண்டு தொண்டர்களை பார்த்து கையசைத்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

Exit mobile version