Home CINEMA NEWS ஓ சொல்றியா மாமா பாடலுக்கு பிரபல நடிகருடன் செம ஆட்டம் போட்ட சமந்தா…!!! சமந்தாவின் நெளிவு...

ஓ சொல்றியா மாமா பாடலுக்கு பிரபல நடிகருடன் செம ஆட்டம் போட்ட சமந்தா…!!! சமந்தாவின் நெளிவு சுளிவான நடனத்தை பார்த்து மிரண்டு போன பாலிவுட்..!!!

samantha o solriya mama dance with akshyakumar

சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து விட்டோம் அடுத்து நம்ம டார்கெட் பாலிவுட் தான் என்று கணக்குப்போட்டு உள்ள சமந்தா தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல ஹாலிவுட் திரைப்படம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

முன்னணி கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கும் சமந்தா சமீபத்தில் காத்து வாக்குல 2 காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதே படத்தில் நயன்தாராவும் நடித்திருந்தார். கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நயன்தாராவும் கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்திருந்தார்கள்.

நயன்தாரா இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஹிந்தி படமான ஜவான் படத்தில் ஹீரோயினாக பாலிவுட்டுக்கு அறிமுகமாகியுள்ளார். சமந்தாவும் பாலிவுட்டுக்கு என்ட்ரி கொடுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கையில் அவருக்கு பிடித்தது போல் கதை அமைய தற்போது பாலிவுட்டிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா.

காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் ரெட் கலர் டாப்ஸ் பிங்க் கலர் பேண்ட் அணிந்து கொண்டு செம ஸ்டைலாக வந்து அசத்தியுள்ளார் சமந்தா. இந்த நிகழ்ச்சி விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டார்ல் வெளியாக இருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ப்ரமோ வைரலானது.

அதில் சமந்தாவை தூக்கிக்கொண்டு அக்ஷய்குமார் அந்த நிகழ்ச்சிக்கு வருவது போலவும் சமந்தாவுடன் ஜாலியாக நெருக்கமாக அக்ஷய்குமார் பேட்டி கொடுத்த வீடியோ வைரல் ஆனது.

தற்பொழுது சமந்தா அக்ஷய்குமாரின் மற்றொரு வீடியோ செம வைரலாகி வருகிறது. சமந்தாவின் மாபெரும் ஹிட் பாடல் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு அட்சயகுமார் சமந்தாவும் ஆடிய நடன அசைவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தாவிற்கு எப்படி மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்கின்ற ட்ரிக் தெரிந்து விட்டது போல என்கிறார்கள் ரசிகர்கள்.

Exit mobile version