Home CINEMA NEWS சமந்தா வாழ்க்கையில் இவ்வளவு சோகமா… விவாகரத்துக்கும் இதுதான் காரணமோ…?

சமந்தா வாழ்க்கையில் இவ்வளவு சோகமா… விவாகரத்துக்கும் இதுதான் காரணமோ…?

samantha affected by myo

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அது மட்டுமில்லாமல் தமிழில் நன்றாக பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் ஒருவர் சமந்தா. விஜய் ,விக்ரம்,சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த சமந்தா திருமணத்திற்கு பின்பும் தனது மார்க்கெட் இழக்காமல் முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார்.

பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகன் சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு சமந்தாவும் நாகன் சைத்தன்யாவும் விவாகரத்து பெற்றுக் கொண்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

விவாகரத்துக்கு பின்பும் தன் நடிப்பை கைவிடாமல் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன் வெளியான “உம் சொல்றியா” என்ற பாடல் பாடலுக்கு சிறப்பு நடிகையாக நடித்திருந்தார். அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மயோசிடிஸ் என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, உடல்ரீதியாக சிரமப்பட்டு வருகிறார். இந்நிலையில் சமந்தாவின் உயிர் நண்பரான ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் ஆணாதிக்கம் நிறைந்த இடத்தில் சமந்தா இருந்ததால்தான் அவருக்கு இந்த நிலைமை, அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாரும் ஆணாதிக்கம் பெற்றவர்கள் என்றும் பதிவிட்டுள்ளார். தற்பொழுது இந்த பதிவு சமந்தா ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருகின்றது. மேலும் சமந்தா விவாகரத்துக்கு இதுதான் காரணம் என்று பேசப்படுகின்றது.

இதையும் படிங்க: விஜயின் வாரிசு படத்தின் கதை இதுதானா…!!! வெயிட்டீங்களே வெறி ஏறுதே குஷியான ரசிகர்கள்…!!! இணையத்தில் வெளியான புகைப்படங்கள்.

Exit mobile version