Home CINEMA NEWS கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்கிறாரா சமந்தா..? சமந்தா நடித்த அந்த சில காட்சிகளால் வந்த சண்டை…!!!

கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்கிறாரா சமந்தா..? சமந்தா நடித்த அந்த சில காட்சிகளால் வந்த சண்டை…!!!

samantha nagachaitanya going to get divorce true

சமந்தா சென்னை பல்லாவரத்து பொண்ணு தமிழ் சினிமாவிற்கு என்டர் ஆகி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தது மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது சமந்தா நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல 2 காதல் படத்தில் படு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் இந்தப் படத்தில் நயன்தாராவும் சமந்தாவுடன் சேர்ந்து நடிக்கிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு சூட்டிங் செல்லாமல் ஓய்வு எடுக்கப் போவதாக சமந்தா தெரிவித்திருந்தார். ஏற்கனவே சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைத்தன்யா அவர்களுக்கும் சில பிரச்சனைகள் தொடர்ந்து இருந்து வருவதாகவும் இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெலுங்கு மீடியாவில் பரவி வந்தது.

அதற்கு பதில் ஏதும் அளிக்காமல் இருந்தது சமந்தா தரப்பு. சமந்தாவின் கணவர் நாக சைதன்யா சாய்பல்லவியுடன் நடித்த லவ் ஸ்டோரி என்ற படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது அதனை பார்த்த சமந்தா ட்வீட் செய்து படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் கூறி இருந்தார், சாய் பல்லவிக்கு வாழ்த்தி தெரிவித்து இருந்தார்.

கணவர் நாக சைதன்யா பற்றி எந்த ஒரு வார்த்தையும் அவர் கூறவில்லை. சில நாட்களுக்கு முன்பு சமந்தாவின் மாமனார் நாகர்ஜுனா அவர்களின் பிறந்த நாளின் போது அனைவரும் வாழ்த்து தெரிவித்து வந்தன அப்போது சமந்தாவும் வாழ்த்து தெரிவித்தார் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்விட் செய்த நாகர்ஜூனா மருமகள் சமந்தாவிற்கு எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.

இதற்கெல்லாம் காரணம் சமந்தா கிளாமர் காட்சிகளில் நடிப்பதால் தான் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் சமந்தா நடித்த ஃபேமிலி மேன் வெப் சீரியலிலும் சில கிளாமர் காட்சிகள் இருந்தது அது மட்டுமல்லாமல் சமீபத்தில் அவர் போட்டோ ஷூட் புகைப்படத்திற்கு கொடுத்த போஸ் ஓவர் கவர்ச்சியாக இருந்ததால் குடும்பத்தில் சில மனக்கசப்புகள் இருந்து வருகிறது என்று தெலுங்கு தேச மீடியாக்கள் தெரிவித்து வருகிறது.

உண்மை எது என்று இருவரும் வாய்திறந்தால் மற்றும் தெரியும்

Exit mobile version