Home NEWS தமிழக அரசு அறிவிப்பின்படி ரேஷன் கடைகளில் இன்று முதல் டோக்கன் விநியோகம்..!!! என்னன்னா பொருள்கள் தெரியுமா...

தமிழக அரசு அறிவிப்பின்படி ரேஷன் கடைகளில் இன்று முதல் டோக்கன் விநியோகம்..!!! என்னன்னா பொருள்கள் தெரியுமா லிஸ்ட் இதோ ?

ration shop

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா இரண்டாவது அலை மக்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நிவாரணமாக ரூ. 4000 கொடுக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் மே மாதம் 2000 ரூபாயும், ஜூன் மாதம் 2000 ரூபாய் கொடுப்பதாக தகவல் வெளியிடப்பட்டன. ஜூன் 3 ம் தேதி கலைஞர் பிறந்த நாளையொட்டி மளிகை பொருட்கள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் ஊரடங்கு காலகட்டத்தில் மக்களின் சிரமத்தை குறைக்க நடமாடும் காய்கறி,பழங்கள் விற்பனை செய்வது போல மளிகை பொருட்களும் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பாக 13 மல்லிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அறிவித்துள்ள 13 மளிகை பொருட்கள் வழங்க ஜூன் 1ஆம் தேதி முதல் 4 தேதி வரை டோக்கன் வழங்க திட்டமிட்டுள்ளனர். ஜூன் 5 ஆம் தேதியிலிருந்து ரேஷன் கடைகளில் 13 மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். அதேபோல் நிர்வாக காரணங்களுக்காக துவரம் பருப்பு மட்டும் 7 ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் கிடைக்குமென தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

13 ரேஷன் பொருட்கள்
கோதுமை மாவு -1 கிலோ
உப்பு -1 கிலோ
ரவா -1 கிலோ
சர்க்கரை – 500 கிராம்
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
புளி – 250 கிராம்
கடலைப்பருப்பு – 250 கிராம்
கடுகு – 100 கிராம்
சீரகம் – 100 கிராம்
மஞ்சள் தூள் – 100 கிராம்
மிளகாய் தூள் – 100 கிராம்
குளியல் சோப்பு (150 கிராம்) -1
துணி சோப் 250 கிராம் -1

Exit mobile version