Home CINEMA NEWS சோழ பரம்பரையில் ஒரு லண்டன் தாதா..!!! தனுஷின் ஜகமே தந்திரம் ட்ரைலர் இதோ..!!!

சோழ பரம்பரையில் ஒரு லண்டன் தாதா..!!! தனுஷின் ஜகமே தந்திரம் ட்ரைலர் இதோ..!!!

jagame thandiram trailer release

தனுஷ் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு அசுரத்தனமான நடிகர். முதலில் தமிழில் கமர்சியல் படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வந்த தனுஷ் சில வருடங்களாக நன்றாக நடிக்கக்கூடிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

புதுப்பேட்டை என்ற படத்தின் மூலம் தனது நடிப்பை வேறொரு பரிமாணத்தில் வெளிப்படுத்திய தனுஷ் அதனை தொடர்ந்து நல்ல கதைகளை கொண்ட படங்களில் நடித்து வந்தார் குறிப்பாக சமீபத்தில் வெளியான வெற்றிமாறனின் அசுரன் படம் மாபெரும் வெற்றியை கொடுத்து இப்படி ஒரு நடிகன் தமிழ் சினிமாவில் இருக்கிறாரே என்று பெருமைப்பட வைத்தது.

அதனைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான கர்ணன் படம் பெரிய வெற்றி பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது.

தனுஷ் தற்பொழுது ஹாலிவுட் வெப் தொடரில் நடித்து கொண்டு இருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படம் ரிலீஸ் ஆக இருக்கும் நேரத்தில் கொரோனா காரணத்தால் படம் தள்ளிப்போனது தற்போது ஜூன் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகிறது.

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பல தரப்பு ரசிகர்களை கவர்ந்து பல கோடி பார்வையாளர்களைக் கடந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் மதுரைக்கார சுருளி என்ற ரவுடி லண்டனில் எப்படி தாதா ஆகிறார் என்பதை ஹாலிவுட் படம் போல எடுத்திருப்பது டிரெய்லரில் தெரிகிறது.

தற்பொழுது வெளியாகி உள்ள இந்த ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. குறிப்பாக தனுஷ் ட்ரைலரின் இறுதியில் சொல்லும் சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா என்று கூறும் வசனம் மாஸ்.

இதோ ட்ரைலர்

Exit mobile version