Home NEWS உணவை எப்படி சாப்பிட வேண்டும் மக்களுக்கு எடுத்து சொல்லும் IPS அதிகாரி திரு சைலேந்திர பாபு...

உணவை எப்படி சாப்பிட வேண்டும் மக்களுக்கு எடுத்து சொல்லும் IPS அதிகாரி திரு சைலேந்திர பாபு அவர்கள்..!!! வீடியோ உள்ளே.

திரு சைலேந்திர பாபு ஐ.பி.ஸ் அதிகாரி இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டி என்றே சொல்லலாம். 58 வயது ஆன இவரது செயல்கள் ஆச்சர்யப்படும் வகையில் இருக்கும். இளைஞர்களை பெரிதாக நம்பிய விவேகானந்தர், அப்துல் காலம் ஐயா போலாவே இளைஞர்களை நம்பும் இவரை போன்ற அதிகாரிகளும் இருக்கிறார்கள் இன்றும்.

ரஜினி சொல்வது போல வயது என்பது நம்பர் தான் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு. திரு சைலேந்திர பாபு அவர்கள் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடுவது, இளைஞர்களுடன் சைக்ளிங் செல்வது, உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக செய்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுடன் உரையாடி தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அறிவுரை வழங்குவார்.

தற்பொழுது கொரோனா ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு பயனுள்ள விஷயங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். மதிய உணவை எப்படி எடுத்து கொள்ள வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். காய்கறிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி எடுத்து கூறியுள்ளார். ரைஸ் அளவாக சாப்பிட வேண்டும் அளவை மீறி அதிகமாக உட்கொண்டால் உடல் எடை கூடும் போன்ற டிப்ஸ் கொடுத்துள்ளார்.

போலீசாராக மட்டும் இல்லாமல் மக்கள் மீது அக்கறை காட்டும் இது போல அதிகாரிகளை பாராட்டியே ஆக வேண்டும்.

Exit mobile version