Home NEWS கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்ய திருமணத்தையே தள்ளி வைத்த பெண் மருத்துவர். ..!!! கேரளாவில் நெகிழ்ச்சி...

கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்ய திருமணத்தையே தள்ளி வைத்த பெண் மருத்துவர். ..!!! கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்.

உலகமெங்கும் கொரோனா நோயின் தாக்குதல் அதிகரித்து வர மருத்துவர்கள் சரியாக உறங்காமல் போராடி வருகின்றனர். உயிர் காக்கும் கண்ணுக்கு தெரியும் தெய்வம் என்றால் மருத்துவர்கள் தான். இன்று எத்தனையோ மருத்துவர்கள், செவிலியர்கள் குடும்பத்தை விட்டு விட்டு கொரோனாவில் இருந்து நோயாளிகளை காக்க போராடி கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் கேரளாவில் இருக்கும் பெண் மருத்துவர் ஒருவர் தனது திருமணத்தையே தள்ளிவைத்து இருக்கிறார் கொரோனா நோயாளிக்காக. கேரளா மாநிலம் கண்ணுரில் உள்ள பரியராம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வருகிறார் ஷிஃபா. இவருக்கு வயது 23 இவருக்கும் துபாய்யை சேர்ந்த தொழில் அதிபர் அனுஷ் முகமது என்பவருக்கும் மார்ச் 29 -ம் தேதி திருமணம் நடத்த ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கேரளாவில் கொரோனா பரவி வரும் நிலையில் கொரோனாவால் தனிமை படுத்தப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக தனது திருமணத்தையே தள்ளி வைத்து உள்ளார் இந்த பெண்.

” என் திருமணம் எப்போது வேணாலும் தள்ளி செய்து கொள்ளலாம். ஆனால் நோயாளிகளை சாகடிக்க துடிக்கும் கொரோனாவை தள்ளி வைக்க முடியுமா என்று ஷிஃபா கூறினார். அது மட்டும் அல்லாமல் திருமணத்தை தள்ளி வைப்பதை பற்றி மணமகன் வீட்டிலும் கூறினேன். அவர்கள் முழு மனதோடு சம்மதம் தெரிவித்தார்கள். ஒரு மருத்துவராக என் கடமையை செய்து உள்ளேன் இதில் பெருமைப்பட ஏதும் இல்லை “என்று ஷிஃபா கூறினார்

“உங்களை போன்ற மருத்துவர்களால் தான் இன்று நோய் வந்தும் நோயாளிகள் நலமுடன் இருக்கிறார்கள். உங்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை”

Exit mobile version