Home MOVIE REVIEW மலேசியா டூ அம்னீஷியா – திரைவிமர்சனம்.

மலேசியா டூ அம்னீஷியா – திரைவிமர்சனம்.

malasiya to amnesia movie review

கொரனோ ஊரடங்கு நேரத்தில் தியேட்டர்கள் திறக்காத நிலையில் மக்கள் பொழுதை செலவிட OTT தளங்கள் தான் உதவியாக இருக்கின்றன. பல OTT தளங்கள் பல நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை வெளியிட்டு வருகின்றனர். தற்பொழுது ஜீ 5 OTT தளத்தில் வெளியாகியுள்ள ராதாமோகனின் மலேசியா டூ அம்னீஷியா படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.

வைபவ், கருணாகரன், எம்எஸ் பாஸ்கர், வாணிபோஜன், மயில்சாமி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மொழி, பயணம், அபியும் நானும் படத்தை இயக்கிய ராதா மோகன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

வைபவ் நீண்ட நாட்களுக்குப் பிறகு இவருக்கு கிடைத்த நல்ல கதாபாத்திரம் என்று சொல்லலாம். அவருடைய கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

வாணி போஜன் வைபோவின் மனைவியாக அப்பாவி கிராமத்துப் பெண்ணாகவும், கணவனை நேசிக்கும் பெண்ணாகவும் நடிப்பில் அசத்தி இருக்கிறார். வாணிபோஜன் சில சென்டிமெண்ட் காட்சிகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கருணாகரன் இவரும் வைபவ்வும் சேர்ந்து அடிக்கும் லூட்டி தான் முழு படம். வைபவ்வின் நெருங்கிய நண்பராக வரும் கருணாகரன் கடைசி வரை நம்மை சிரிக்க வைக்கிறார்.

இவர்களை விட முக்கியமாக சொல்ல வேண்டியது எம் எஸ் பாஸ்கர் வாணி போஜனின் தாய் மாமாவாக(மன்னார்குடி மன்னாராக) வந்து வைபவ்வை கண்காணிக்கும் இடங்கள் மற்றும் அவர் செய்யும் சேட்டைகள் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. மனிதர் நடிப்பில் அசத்தி உள்ளார்.

ராதாமோகன் இவரது இயக்கத்தை பற்றி சொல்லத் தேவையே இல்லை ஏற்கனவே இவர் எடுத்த படங்கள் உணர்வுபூர்வமாகவும் நகைச்சுவையாகவும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது அந்த வகையில் மலேசியா டூ அம்னீஷியா நிச்சயம் பல ரசிகர்களை கவரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

மொத்தத்தில் ஊரடங்கு நேரத்தில் சரியான நகைச்சுவை படத்தை பார்க்க நினைக்கும் ரசிகர்களுக்கு இந்த மலேசியா டூ அம்னீஷியா நிச்சயம் சிரிக்க வைக்கும்.

மலேசியா டூ அம்னீஷியா – STRESS BUSTER

ரேட்டிங்: 3 .75 /5

Exit mobile version