Home MOVIE REVIEW தளபதி விஜயின் லியோ வெற்றி படமா….? லியோ திரைவிமர்சனம் இதோ. | LEO MOVIE REVIEW

தளபதி விஜயின் லியோ வெற்றி படமா….? லியோ திரைவிமர்சனம் இதோ. | LEO MOVIE REVIEW

leo movie review

லியோ தளபதி விஜய் லோகேஷ் கூட்டணியில் மாஸ்டர் என்ற வெற்றி படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணி வெற்றி பெற்றதா ரசிகர்களை திருப்திபடுத்தியதா என்று வாருங்கள் பார்க்கலாம்.

கதை:

பார்த்திபன் ஒரு காபி ஷாப் வைத்து நடத்தி வருகிறார். மனைவி ஒரு மகன் மற்றும் மகள் என்று தனது குடும்பத்துடன் வாழந்து வரும் பார்த்திபன் எதிர்பாராமல் ஒரு ரௌடி கும்பலை தனது காபி ஷாப்பில் வைத்து கொலை செய்துவிடுகிறார். கொள்ளை செய்துவிட்டோமே என்று வருத்தத்தில் இருந்த பார்த்திபன் குடும்பத்தை தேடி பெரிய ரவுடி கும்பல் காஷ்மீருக்கு வருகிறது. பார்த்திபனை லியோ என்று கூறி ஒரு ரவுடி கும்பல் காஷ்மீருக்கு வருகிறது. பார்த்திபனை லியோ என்று ஒத்துக்கொள்ள சொல்லி அந்த ரவுடி கும்பலின் தலைவன் சஞ்சய் தத் தொடர்ந்து பார்த்திபனை வற்பறுதி வருகிறார். ஒரு கட்டதில் ஒரு வேலை பார்த்திபன் லியோவாக இருப்பாரோ என்ற சந்தேகம் பார்த்திபனின் மனைவி த்ரிஷாவிற்கு வருகிறது. பார்த்திபனின் மகளை ரவுடி கும்பல் கடத்தி செல்கிறார்கள். அதன் பின் எப்படி பார்த்திபன் மகனை மீட்டார் என்பதே கதை.

தளபதி விஜய் MIDDLE AGE குடும்ப தலைவனாக ஒரு மெச்சூரிட்டி ஆன நடிப்பு ஆஹா ரகம். முதலில் கமர்சியல் போர்வைக்குள் இருந்து வெளியே வந்து புதிதாக செய்யலாம் என்ற முயற்சிக்கு சபாஷ் விஜய். பார்த்திபன் விஜயாக அப்பாவியாகவும், மனைவிக்கு பயப்படுவது, குழந்தைகளுடன் விளையாடுவது என்று அசத்தி இருக்கிறார். குறிப்பாக அப்பாவி தனமாக இருக்கும் பார்த்திபன் விஜய் தன் குடும்பத்தை சீண்டும் போது பொங்கி எழும் காட்சி பட்டாசு. நா ரெடி தான் வரவா விஜயின் நடனம் தியேட்டர் அதகளம் ஆகிறது.

திரிஷா சத்யா என்ற கதாபாத்திரத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்து உள்ளார். விஜயுடன் சிறு சிறு ரொமான்ஸ் காட்சியில் உண்மையான கணவன் மனைவி போல இருந்தார்கள். குறிப்பாக ஒரு எமோஷனல் காட்சியில் விஜய் திரிஷா லிப்லாக் காட்சி ரொமான்டிக் ரகம். ஒரு மகன் மற்றும் மகளுக்கு அம்மாவாக நடித்து இருந்தாலும். கொள்ளை அழகாய் இருக்கிறார். நல்ல நடிப்பு.

கவுதம் மேனன் போலீஸ் ஆபீஸராக நடித்து அசத்தி உள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த்.

முக்கியமாக நடன இயக்குனர் சண்டீ மற்றும் மிஸ்கின் ஆரம்பத்தில் சில காட்சிகளே வந்தாலும் மிரட்டல் ரகம். சண்டீ இனி வாய்ப்புகள் குவியும்.

மன்சூர் அலிகான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அவர் வரும் காட்சிகள் சூப்பர்.

விஜய்க்கு மகனாக மேத்யூ தாமஸ் அருமையான நடிப்பு. தந்தை விஜயுடன் அவர் விளையாட்டாக பேசும் காட்சியிலும் சரி, தந்தையுடன் துணை நிற்கும் காட்சி நல்ல நடிப்பு. அது போல விஜயனின் மகளாக நடித்த இயல் இயல்பான நடிப்பு.

அனிருத் படத்தின் சில கட்சிகளுக்கு இவருடைய பின்னணி பெரிய உயிர் கொடுத்தது. குறிப்பாக யாருடா வில்லன் மற்றும் Im scared என்ற ஆங்கில பாடல் பின்னணியில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தியது. சபாஷ் அனிருத்.

அன்பறிவு மாஸ்டர் ஸ்டண்ட் காட்சிகள் மாஸ் ரகம்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் காஷ்மீர் காட்சிகளும் சரி சண்டை காட்சிகளை படமாக்கிய விதம் புதுமை.

கடைசியாக CAPTAIN OF THE SHIP லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவிற்கு இப்படி ஒரு இயக்குனர் கிடைத்தது நமக்கு பெருமை. இயக்குனர் ஆனோம் விஜயை வைத்து கமர்ஷியல் படத்தை எடுப்போம் சம்பாரிப்போம் என்று இல்லாமல் காட்சிக்கு காட்சி மெனக்கெட்டு இருக்கிறார் மனுஷன். விஜய் வேறொரு பரிமாணத்தில் காட்டியது மட்டும் அல்லாமல் விஜய் நடிப்புக்கு தீனி போடும் வகையில் கதையும் எழுதி உள்ளார். History of Violence கதை என்றாலும் அதனை ரசிகர்களுக்கு புரியும் படி அழகான சில மாற்றங்களை செய்து அதனை அவருடைய LCUவில் இணைத்து புத்திசாலித்தனம். விக்ரமில் LCUவில் அந்த நடிகர்களே வருவார்கள் அதனால் GOOSEBUMPS இருக்கும் ஆனால் இதில் மாபெரும் நட்சத்திரத்தின் குரல் மட்டும் ஒலிக்கிறது இருந்தாலும் GOOSEBUMPS தான். வாழ்த்துக்கள் லோகேஷ் இன்னும் புதிய முயற்சி எடுத்து தமிழ் சினிமாவை அடுத்த இடத்திற்கு கொண்டு போங்க.

CG ஒர்க் செய்த கம்பனியை பாராட்டியே ஆக வேண்டும் HYENA சம்மந்தப்பட்ட காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகள் வேற லெவல். தமிழ் சினிமா டெக்கனிகளாக ஒரு படி மேல சென்று உள்ளது CG ஒர்க்கில் என்று கூறலாம்.

பிளஸ்:

தளபதி விஜய் படத்தில் அதனை கதாபாத்திரம் இருந்தும் மனதில் நிற்பது பார்த்திபன் மற்றும் லியோ தான்.

விஜய் திரிஷா ஜோடி

HYENA CG காட்சிகள் வேற ரகம்.

இயக்குனர் லோகேஷ் இயக்கம்

அனிருத் பிண்ணனி இசை.

ரத்னா மற்றும் தீரஜ் எழுதிய சில வசனங்கள்.

மைனஸ்:

சிறு சிறு தொய்வான காட்சிகள்.

மொத்தத்தில் LEO லோகேஷ் விஜய் கூட்டணியில் மீண்டும் ஒரு வெற்றி படம் என்பதில் மாற்று கருத்து இல்லை.

Rating: 3.75/5
VERDICT : BLOCKBUSTER

Exit mobile version