Home NEWS 24 ஆண்டுகள் பதிந்தும் அரசு வேலை கிடைக்காத மனவேதனையில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு எதிரே பிளக்ஸ் பேனர்...

24 ஆண்டுகள் பதிந்தும் அரசு வேலை கிடைக்காத மனவேதனையில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு எதிரே பிளக்ஸ் பேனர் வைத்த இளைஞர்..!!!

pudukkotai man not get job flex banner

அரசு வேலை கிடைக்காத விரக்தியில் புதுக்கோட்டை இளைஞர் ஒருவர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் FEB 14 தேதி புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே அவருடைய புகைப்படத்துடன் உள்ள ஒரு பிளக்ஸ் பேனர் ஒன்றை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் வைத்த பேனரில் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெற்றிகரமாக 24 ஆம் ஆண்டு பதிவு மூப்பை புதுப்பித்து விட்டேன் என்று தெரிவித்திருந்தார் அதனைத் தொடர்ந்து அவருடைய பதிவு எண்ணையும் அந்த பேனரில் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து நமது 24x7tamil மீடியா அவரை தொடர்புகொண்டு கேட்டதற்கு நான் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். எஸ்எஸ்எல்சி 1997 முடித்தேன் பிளஸ்-2 1999 இல் முடித்தேன் அதன்பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன்.

அதனைத் தொடர்ந்து D.Ted ஆசிரியர் பயிற்சியையும் முடித்து அதையும் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். வாகன ஓட்டுநர் பயிற்சி முடித்து அதையும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்திருந்தேன். அரசு ஓட்டுநர் பணியாவது கிடைக்கட்டும் என்று அதைப் பதிவு செய்து இருந்தேன்.

நான் இதை எந்த ஒரு அரசியல் நோக்கத்திலும் செய்யவில்லை. எனது மன வேதனையை வெளிப்படுத்தி உள்ளேன். கஷ்டப்பட்டு படித்து அரசு வேலைக்காக பதிவு செய்து இன்றுவரை எந்த அழைப்பும் எனக்கு வரவில்லை என்பது பெரிய வேதனை தரும் விஷயமாக எனக்கு இருந்தது. ஆசிரியர் பயிற்சி முடித்த எனக்கு தற்பொழுது வயதும் ஆகிவிட்டது இனி அதற்கான அரசு பணி எனக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை.

தற்பொழுது நான் குறைந்த சம்பளத்திற்கு தனியார் வாகனம் ஓட்டி குடும்பத்தை நடத்தி வருகிறேன். அரசு வேலை என்றாவது கிடைக்காதா என்று எண்ணி 24 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகிறேன். இன்று வரை எந்த ஒரு அழைப்பும் வரவில்லை இது பெரும் மன உளைச்சலில் ஏற்படுத்தியது. அரசு வேலைக்காக காத்திருந்து வயது முடிந்து நொந்துபோன என்னைப்போன்ற பலர் இருக்கிறார்கள். வேலை கிடைக்காத மன உளைச்சலில் தான் இவ்வாறு செய்தேன் என்று கூறினார்.

அனந்தராஜின் பிளக்ஸ் பேனரை பார்த்த புதுக்கோட்டை வேலைவாய்ப்பு அலுவலத்தினர் ஆனந்த்ராஜினை அழைத்து நாங்கள் சீனியாரிட்டி படி தான் வேளைக்கு ஆள் எடுப்போம். சீனியாரிட்டி படி வரும் பொது உங்களுக்கு பொருத்தமான வேலையை கொடுப்போம் என்று கூறி உள்ளார்கள்.

Exit mobile version