Home NEWS சாலையில் கிடந்த ஒரு லட்சத்தி 75 ஆயிரம் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்..!!! நேர்மைக்கு கிடைத்த...

சாலையில் கிடந்த ஒரு லட்சத்தி 75 ஆயிரம் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்..!!! நேர்மைக்கு கிடைத்த பாராட்டுக்கள்.

chennai autodriver handover one lakh seventy five thousand to police

மெரினா கடற்கரை சென்னையில் எப்போதும் பிஸியான இடம். வெளியூரிலிருந்து வருபவர்கள் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் மெரினா கடற்கரையை பார்த்துச் செல்வது வழக்கமாக வைத்துள்ளனர்.

மெரினாவின் அழகை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் தங்களது பொழுதை அங்கு கழித்துவிட்டு ஓய்வு எடுத்த பின் தான் அடுத்த வேலைக்கு செல்கிறார்கள். மெரினாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போக சுற்றுலா பயணிகள் தவறுதலாக சில பொருட்களையும் அங்கே விட்டு விட்டு செல்கின்றனர். தவறுதலாக விட்ட பொருள் மறுபடியும் அவர்களுக்கு கிடைப்பதும் இல்லை யாரோ ஒருவர் அந்த பொருளை எடுத்துக் கொண்டு சென்றுவிடுவார்கள்.

சென்னை மெரினா கடற்கரை அருகே சாலையில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பணம் உண்டு ஒரு பையில் கிடந்துள்ளது. அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுனர் சுப்பிரமணி என்பவர் அந்தப் பையுடன் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பணத்தை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

சாலையில் கிடந்த பணம் தானே என்று அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் மனிதாபிமானத்தோடு பிறருடைய பணம் தனக்கு எதுக்கு அது உரிமையாளர்களிடம் எப்படியாவது சென்றடைய வேண்டும் என்று காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனை அறிந்த சென்னை போலீஸ் கமிஷனர் திரு.மகேஷ் அகர்வால் ஐபிஎஸ் அவர்கள் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை உரியவர்களிடம் சேர்க்குமாறு காவல்நிலையத்தில் ஒப்படைத்த சுப்பிரமணியன் ஆட்டோ டிரைவர் அவர்களை அழைத்து பாராட்டி அன்பளிப்பு ஒன்றை வழங்கி அனுப்பியுள்ளார்.

Exit mobile version