Home NEWS 3 வேளாண்மை சட்டத்தை திரும்ப பெற்ற பிரதமர் மோடி..!!! விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி..!!!

3 வேளாண்மை சட்டத்தை திரும்ப பெற்ற பிரதமர் மோடி..!!! விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி..!!!

modi vaypus 3 agricultural law

விவசாயிகள் ஓராண்டாக போராடிய போராட்டத்திற்கு இன்று பெரிய வெற்றி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது அது தொழிலதிபர்களுக்கு சாதகமாகவும் சிறு குறு விவசாயிகளுக்கு பெரிய பாரம் தரும் ஒன்றாக இருந்தது.

அந்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் ஒரு வருடமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தற்போது தேர்தல் நடக்கவுள்ள பஞ்சாப் உத்திரப்பிரதேசம் போன்ற இடங்களில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இன்னிலையில் பிரதமர் மோடி அவர்கள் இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடையே நேரலையில் உரையாடினார் அப்போது அவர் தெரிவித்தது விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை நான் பார்த்திருக்கிறேன். விவசாயிகளுக்கு சேவை செய்வதே அரசின் நோக்கம்.

விவசாயிகளின் நலனை காப்பதற்காகத்தான் 3 விவசாய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தோம். வேளாண் சட்டங்களில் இருக்கும் நல்ல விஷயத்தை விவசாயிகளுக்கு புரிய வைப்பதில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை அதனால் 3 வேளாண் சட்டத்தை திரும்பப் பெறப்படும் என்று அறிவிக்கிறேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த அறிவிப்பு விவசாயிகளின் ஓராண்டு போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இந்தவெற்றிக்காக போராட்டத்தில் பலர் உயிர்களை கொடுத்து உள்ளனர்.

Exit mobile version