Home NEWS முதல்வர் ஸ்டாலின் வீட்டில் மந்தரங்கள் ஓதி பிரசாதம் கொடுத்த திருப்பதி தேவஸ்தானம் அர்ச்சகர்கள்..!!!

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் மந்தரங்கள் ஓதி பிரசாதம் கொடுத்த திருப்பதி தேவஸ்தானம் அர்ச்சகர்கள்..!!!

tirupati devasthanam

கடந்த வாரம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றார் தற்போது திமுக தனிப் பெரும்பான்மையை பெற்று ஆட்சி செய்து வருகிறது மேலும் மு க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றவுடன் பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

அதைப்போல் அவரும் முதல்வரான பிறகு மூன்று முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டுள்ளார் முதலில் மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், நான்காயிரம் ரூபாய் கொரோனா நிதி உதவியாக இம்மாதம் 2000 ரூபாயும் அடுத்த மாதம் 2,000 ரூபாயும் குடும்ப அட்டைகளுக்கு வழங்க உள்ளார்.

மூன்றாவது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவத்திற்கான செலவை அரசே ஏற்கும் என்று கையெழுத்திட்டுள்ளனர்.

இதனையொட்டி மரியாதை நிமித்தமாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் செயல் அலுவலர் தர்மா ரெட்டி சார்பில் ஏழுமலையான் கோயிலில் இருந்து அர்ச்சகர்கள் பிரசாதம் கொண்டு வந்து கொடுத்து ஆசி பெற்று உள்ளனர். கடவுள் நம்பிக்கை இல்லாத முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மரியாதை செய்வதை முழு மனதோடு ஏற்று கொண்டார்.

Exit mobile version