Home NEWS அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் கட்டணமின்றி மறுபடியும் நடத்தப்படும் தமிழக அரசு உத்தரவு..!!!

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் கட்டணமின்றி மறுபடியும் நடத்தப்படும் தமிழக அரசு உத்தரவு..!!!

anna university reexam planned by TN Govt

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது இந்நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் கல்லூரிகளில் வகுப்புகள் சரிவர இயக்கப்படவில்லை மாணவர்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு போன்ற வகுப்புகள் மட்டுமே செயல்பட்டது.

அது போல ஆன்லைன் மூலம் வகுப்புகள் செயல்பட்டு கொண்டு இருந்தன இதனுடன் கல்லூரிகளும் வகுப்புகள் ஆன்லைன் மூலமே நடைபெற்றன மேலும் பிரக்டிகல் வகுப்புகள் போன்றவை மட்டுமே கல்லூரிகளில் நடைபெற்றன கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு இல்லாமல் அனைவரும் தேர்ச்சி என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தனர்.

பன்னிரண்டாம் வகுப்பிலும் சில தேர்வுகள் மட்டுமே நடைபெற்றன தற்போது திமுக தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி அவர்கள் இந்த ஆண்டிற்கான அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேர்வுகளைப் பற்றி விபரங்களை இன்று அறிவித்திருந்தார்.

அதில் அவர் கூறுகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் தேர்வு கடந்த ஆண்டு 4,10,000 மாணவர்கள் தேர்வு எழுதியதாகவும் சரியான தேர்வு முடிவுகள் வெளிவராததால் பல மாணவர்கள் குழப்பத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்றைய திமுக நிர்வாகம் அண்ணா பல்கலை கழகத்துடன் கலந்துரையாடிய பின் சென்ற ஆண்டு நடைப்பெற்ற தேர்வு தற்போது மறுபடியும் நடைபெறும் அந்த தேர்விற்கு மாணவர்கள் எந்த வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை அதேபோல் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இந்த தேர்வில் பங்கு கொள்ளலாம் இரண்டு தேர்வுகளில் எதில் அதிக மதிப்பெண் வருகிறதோ அந்த மதிப்பெண்ணை வைத்து கொள்ளலாம் இந்த முறை தேர்வு வழக்கம் போல் மூன்று மணி நேரம் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று செய்தியாளர்களுக்கு தெரிவித்திருந்தார்.

Exit mobile version