Home NEWS சாலை விபத்து குறித்து விசாரணைக்கு சென்ற காவலரே சாலை விபத்தில் சிக்கி மரணம்…!!!

சாலை விபத்து குறித்து விசாரணைக்கு சென்ற காவலரே சாலை விபத்தில் சிக்கி மரணம்…!!!

road accident

மதுரை திருமங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (42) போக்குவரத்து காவல்துறை துறையில் விபத்துகளை கண்காணிக்கும் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். அவர் நேற்று மதியம் விபத்து குறித்து விசாரணைக்கு சென்றுள்ளார். அவர் சின்ன உடைப்பு பகுதியில் நடந்த விபத்து குறித்து விசாரணைக்காக தனது டூவீலரில் சென்றுள்ளார்.

அப்போது மண்டலே நகரில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் சென்ற போது நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக மண்டலே நகர் நோக்கி வந்த அரசு பேருந்து முன் சக்கரம் அவர் மீது ஏறியது பலத்த காயம் அடைந்தார். அப்பொழுது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த காவல்துறையினர் அவரை மீட்டு அவசரஅவசரமாக சிகிச்சைக்கு ஆம்புலன்சில் ஏற்றி சென்றனர்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவர் சற்று தாமதமாக வந்திருந்தால் கூட அவரது உயிரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் விதி, விபத்து குறித்து விசாரணைக்கு சென்ற போலீசாரே சாலை விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார். இந்த சம்பவம் அருகில் இருந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற சாலை விபத்துகள் நாள்தோறும் நடக்கின்றன. வாகனங்களை இயக்குபவர்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

பொதுவாக அவசரம் வேகம் கவனக்குறைவு அவற்றால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குவதால் சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடக்கின்றது. மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து சாலை விதிகளை பின்பற்றி பயணம் மேற்கொள்ள வேண்டும்.

Exit mobile version