Home NEWS 6 மாத கர்ப்பிணி பெண் காவலரை கணவன், குழந்தைகள் முன்னிலையில் தலிபான்கள் சுட்டு கொடூர கொலை…!!!

6 மாத கர்ப்பிணி பெண் காவலரை கணவன், குழந்தைகள் முன்னிலையில் தலிபான்கள் சுட்டு கொடூர கொலை…!!!

taliban

ஆப்கானிஸ்தானின் கோர் மாநிலத்தில் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது என்று ஆப்கானிஸ்தான் பத்திரிக்கையாளர் பிலால் சர்வாரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இந்த முறை ஆட்சிக்கு வந்ததால் பெண்களுக்கு உரிய மரியாதை, உரிமைகளை வழங்குவோம் பெண்கள் வேலைக்குச் செல்லவும் சுகாதாரத்துறையில் பணியாற்றவும் அனுமதிப்போம் கல்வி கற்கவும் அனுமதிப்போம் என தாலிபான்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் இது போன்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்த்துவது மீண்டும் கடந்த 1995 2001 ஆண்டுகால தாலிபான்களின் கொடூரமான ஆட்சியை நினைவூட்டுகிறது. கோர் மாகாணம் பிரோஸ்கோ பகுதியை சேர்ந்தவர் பானு நிகரா ஆப்கானிஸ்தான் காவல்துறையில் பணியாற்றும் பானு 6 மாத கர்ப்பிணி. அவருக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு தாலிபான் தீவிரவாதிகள் பானு அவரின் குழந்தைகள் கணவர் குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக் கொலை செய்தனர் என்று பத்திரிக்கையாளர் சர்வாரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பெண் போலீசாரை சுட்டுக் கொண்டதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று தாலிபான்கள் மறுக்கின்றனர். தாலிபான் செய்தித்தொடர்பாளர் ஐபியுல்லாஹ் முஜாஹித் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பெண் போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தெரியும். ஆனால் தாலிபான்கள் கொள்ளவில்லை என்பது உறுதி செய்கிறேன். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

தனிப்பட்ட பகை காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். நாங்கள் ஏற்கனவே கூறியது போல் கடந்த ஆட்சியில் அரசில் பணியாற்றியவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதை உறுதி செய்வோம் என தெரிவித்தார். நேரில் பார்த்தவர்கள் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தாலிபான்கள் அந்த பெண் போலீசாரை அவரின் கணவர், குழந்தைகள் முன்னிலையில் அடித்து உதைத்தனர். மற்றவர்கள் பதில் எதுவும் பேச முடியாமல் தவித்தனர். சனிக்கிழமை இரவு துப்பாக்கியுடன் வந்த 3 பேர் இந்த பெண்ணின் வீட்டிற்குள் சென்றனர்.

துப்பாக்கி வைத்திருந்த மூன்று பேரும் அரபிமொழி பேசினார் என தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமை காபுல் நகரில் தாலிபான் ஆட்சியாளர்களுக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டம் நடத்திய ஒரு பெண் ஆர்வலரை தாலிபான்கள் அடித்து உதைத்து சம்பவம் நடந்தது. இந்த காட்சியை ஆர்வலர் நர்கிஸ் சதாத் வீடியோ எடுத்து வெளியிட்டார். பெண்களுக்கு உரிமை தேவை பிரதிநிதித்துவம் தேவை எனக்கோரி கீரத் நகரில் கடந்த வாரம் பெண்கள் போராட்டம் நடத்திய நிலையில் பெண் போலீசார் கொல்லப்பட்டுள்ளார்.

Exit mobile version