Home NEWS பேரறிவாளன் சந்தோசமாக இல்லை..!!! பாராட்டு விழாவில் அவருடைய தாய் அற்புதம்மாள் பேச்சு..!!!

பேரறிவாளன் சந்தோசமாக இல்லை..!!! பாராட்டு விழாவில் அவருடைய தாய் அற்புதம்மாள் பேச்சு..!!!

peraravivalan and his mother

பேரறிவாளன் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கியதாக கூறப்பட்டு தூக்குதண்டனை விதிக்கப்பட்ட கைதியாக இருந்தார்.

தான் தவறு செய்யவில்லை சட்டப்படி அதை நிரூபிப்பேன் என்று பேரறிவாளன் ஜெயிலில் இருந்து கொண்டு தனது தாய் அற்புதம்மாள் மூலம் வழக்கு நடத்தி வந்தார். பேரறிவாளனை எப்படியாவது வெளியில் கொண்டு வரவேண்டும் என்று அவருடைய தாய் அற்புதம்மாள் சட்டப்படி போராட்டத்தை நடத்தினார்.

19 வயதில் சிறைக்கு சென்று தனது வாழ்க்கையை தொலைத்த மகனை எப்படியாவது மீட்டுவர அந்தத் தாய் போராடியதை பார்க்கையில் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குற்றம் செய்யாத தனது மகனுக்கு சிறை வாழ்க்கை என்று மனம் நொந்துபோன அற்புதம்மாள் தொடர்ந்து பல போராட்டத்திற்கு பிறகு சட்டப்படி தனது மகனை வெளிக்கொண்டு வந்தார்.

கோவையில் 31 ஆண்டுகால நெடிய போராட்டம் தாய் அற்புதம்மாள் என்ற பெயரில் பாராட்டு விழா ஒன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட பேரறிவாளன் மற்றும் அவருடைய தாய் அற்புதம்மாள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வந்தார்கள். அப்போது தாய் அற்புதம் அம்மாள் என்னுடைய மகன் பேரறிவாளன் மகிழ்ச்சியாக இல்லை. அனைவருடைய விடுதலையும் எதிர்பார்க்கிறார் மற்றவர்கள் விடுதலைக்காக சட்டப்படி வேலை பார்ப்போம் என்று கூறிய அவர் என்னுடைய மகன் சட்டப் போராட்டத்தை சட்டம் வழியாக போக வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

இந்த 31 ஆண்டு போராட்டத்தில் சட்டப்படி போராடினோம் சட்டப்படி விடுதலை ஆகி இருக்கிறோம் எந்த ஒரு சலுகையும் கிடையாது. நீதிமன்றம் முடிவெடுக்கும் மற்றவர்களை விடுதலை செய்வது எப்படி என்று அதனை அரசும் முடிவு செய்வார்கள். இப்படி ஒரு வரவேற்பை எங்களது குடும்பமே எதிர்பார்க்கவில்லை நன்றாக இருந்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்று அற்புதம்மாள் உருக்கமாக பேசினார்.

Exit mobile version