Home CINEMA NEWS மருத்துவமனையில் இருந்து பரபரப்பாக வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா…!!! மீனாக்கு ஆபரேஷனா..?

மருத்துவமனையில் இருந்து பரபரப்பாக வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா…!!! மீனாக்கு ஆபரேஷனா..?

hema

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இந்த சீரியலில் கூட்டு குடும்பத்தின் நன்மைகள், சகோதர பாசம் உள்ளிட்ட ஏராளமான முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. மேலும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் உள்ளது. இந்த தொடரில் ஸ்டாலின் முத்து, சுஜிதா, ஹேமா, குமரன், வெங்கட் சரவணன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த தொடர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் இரண்டாவது மருமகளாக மீனா கேரக்டரில் நடித்த வருகிறார். ஹேமா ராஜ்குமார் இவர் ஆரம்பத்தில் வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியல் மூலம் பிரபலமானார்.

அதை தொடர்ந்து மெல்ல திறந்த கதவு, சின்னத்தம்பி போன்ற பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. நடிகை ஹேமா தனியாக ஹேமா டைரிஸ் என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இந்த வகையில் தற்போது ஹேமா வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் எனக்கு ஆபரேஷன் என்ற டைட்டிலுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கழுத்துக்கு கீழான பகுதியில் கட்டி ஒன்று இருந்துள்ளது. அது கேன்சர் கட்டியாக இருக்குமோ என பயத்தில் மருத்துவரிடம் சென்றுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் உள்ளதாகவும் குடும்பத்துடன் தீவிர ஆலோசனைக்கு பிறகு ஆப்ரேஷன் மூலம் கட்டியை அகற்ற இருப்பதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோவில் ரசிகர்களிடம் பெண்கள் உங்கள் உடல் பகுதியில் கட்டிகள் இருந்தால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை சென்று பரிசோதிக்குமாறு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version