Home NEWS “ஆக்சிஜன் பஸ்” கொரோனா காலகட்டத்தில் அதிரடி காட்டும் திருப்பூர் ஆட்சியர் !!! விபரம் உள்ளே

“ஆக்சிஜன் பஸ்” கொரோனா காலகட்டத்தில் அதிரடி காட்டும் திருப்பூர் ஆட்சியர் !!! விபரம் உள்ளே

உலகம் முழுவதும் கொரோனாவால் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு ஓராண்டிற்கு மேலாகவே கொரோனா பாதிப்பு இருந்து கொண்டே வருகிறது. தற்போது இரண்டாவது அலையில் படுபயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நாளில் அதிகபட்சமாக 25,000 மேல் மக்கள் தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கொரோனா பாதித்த மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல்வேறு மருத்துவமனைகளில் மக்கள் மூச்சு விட முடியாமல் இறக்கின்றனர். தமிழகத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. மருத்துவமனையில் உள்ள மக்கள் ஆக்சிஜன் இன்றி இறக்க கூடாது என்பதற்காகவே தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கியுள்ளனர்.

மேலும் ஆக்சிஜன் தேவையை அதிகமாக உள்ளதால் திருப்பூரில் உள்ள பேருந்து ஒன்றை ஆக்சிஜன் பொருத்திய பேருந்தாக வடிவமைத்து மக்கள் பயன்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அவசர தேவைக்காக மருத்துவமனையில் போதிய இடம் இல்லாத போதிலும் இந்தப் பேருந்தில் ஆக்சிஜன் உதவியுடன் நோயாளிகள் தற்காத்துக் கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தனது ட்விட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version