Home NEWS நான் முக ஸ்டாலின் பேசுறேன்..!!! கொரோனா வார் ரூமில் போன் கால் எடுத்து பேசி ஆச்சர்யப்படுத்திய...

நான் முக ஸ்டாலின் பேசுறேன்..!!! கொரோனா வார் ரூமில் போன் கால் எடுத்து பேசி ஆச்சர்யப்படுத்திய முதல்வர்..!!!

mk stalin war room

தமிழ்நாட்டில் கொரோனா அதிகமாக இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. ஊரடங்கு நேரத்தில் மக்கள் அதிகமாக வெளியே வருவதால் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது அரசு.

தற்பொழுது கொரோனா வார் ரூம் ஒன்றை அமைத்துள்ளது தமிழக அரசு அந்த வார் ரூமில் கொரோனா நோயாளிகளுக்காக பெட் ஒதுக்கப்படுவது மற்றும் ஆக்சிஜன் தேவையை கண்காணிப்பது மற்றும் மக்கள் தொலைபேசி மூலம் புகார் அல்லது உதவி கேட்பவர்களுக்கு பதில் அளிப்பது என்று அனைத்து வேலைகளும் அந்த வார் ரூமில் தான் நடக்கிறது.

இந்த வார் ரூம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு திடீரென்று கொரோனா வார் ரூமுக்கு விசிட் அடித்தார் முதல்வர் ஸ்டாலின்.

வார் ரூமில் இருக்கும் அதிகாரிகள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை பார்வையிட்டு வந்தார். அந்த நேரத்தில் வார் ரூமுக்கு வந்த போன் கால்லை முதல்வர் ஸ்டாலின் எடுத்துப் பேசினார். நான் முக ஸ்டாலின் பேசுறான் என்று ஸ்டாலின் பேசினார் அப்போது உறவினர்காக படுக்கை வசதியை கேட்ட அந்த நபருக்கு உடனே படுக்கை வசதி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று அவர்களிடம் கூறினார் முதல்வர்.

முதல்வர் கொரோனா வார் ரூம்க்கு திடீரென்று விசிட் அடித்து பணிகளை கண்காணித்து பாராட்டுக்குரிய ஒன்றாக இருக்கிறது.

Exit mobile version