Home NEWS சசிகலாவை அழைக்கிறதா OPS தரப்பு..!!! திடீர் சந்திப்பின் காரணாம் என்ன?

சசிகலாவை அழைக்கிறதா OPS தரப்பு..!!! திடீர் சந்திப்பின் காரணாம் என்ன?

opannerselvam sasikala

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அதிமுக என இரண்டு கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்தப் போட்டியில் ஸ்டாலினா எடப்பாடி பழனிச்சாமியா என்று போட்டி போட்டுக்கொண்டு தீவிரப் பிரச்சாரத்தில் தேர்தலில் ஈடுபட்டனர்.

கடைசியில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஜெயித்தது. அதன்பின் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

அப்போது தான் தொடங்கியது அதிமுக கட்சியில் பெரிய குழப்பம் யார் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க கட்சி அலுவலகத்தில் ஒரு கூட்டம் ஒன்று நடந்தது.

ஒரு கோஷ்டி எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்று கூற மற்றொரு கோஷ்டி பன்னீர்செல்வம் அவர்கள் தான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்று வார்த்தைகளால் வாக்குவாதத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர். .

அதன்பின் பேச்சுவார்த்தைகள் நடத்தி எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் எதிர்க்கட்சித் தலைவராகிறார் என்று அறிவித்தார்கள் ஓபிஎஸ் தரப்பிலிருந்து மௌனம் மட்டுமே பதிலாக இருந்தது.

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பதவி ஏற்று செயல்பட்டு வரும் இந்நேரத்தில் சசிகலா அவர்களை பன்னீர் செல்வம் அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் சமீபத்தில் சந்தித்துள்ளார்.

ரமேஷ் என்பவர் பன்னீர் செல்வத்திற்கு மிகவும் நெருக்கமானவர் அவர் சசிகலாவை ஏதோ ஒரு காரணத்தால்தான் சமீபத்தில் சந்தித்துள்ளார் என்று கூறிவருகிறார்கள் தொண்டர்கள்.

ஓபிஎஸ் நெருங்கிய நண்பர் சசிகலா அவர்களை சந்தித்தது ஏன் என்று விரைவில் தெரியவரும் என்று கூறி வருகிறார்கள்.

Exit mobile version