Home CINEMA NEWS தமிழ் சினிமாவிற்கு கிடைத்த இன்னொரு MADDY..!!! அஸ்வின் புகைப்படத்திற்கு பெண் ரசிகர்களிடம் குவியும் லைக்ஸ்.

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த இன்னொரு MADDY..!!! அஸ்வின் புகைப்படத்திற்கு பெண் ரசிகர்களிடம் குவியும் லைக்ஸ்.

cook with comali ashwin

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது கடந்த வருடம் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி சமையலுக்கான நிகழ்ச்சி என்று எண்ணிய நிலையில் கோமாளிகள் செய்த அட்ராசிட்டியால் TRP யில் நல்ல ரேட்டிங்கை பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறார்கள் நடிகர் அஸ்வின் விளம்பரங்கள் குறும்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்திருந்தார் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவல் குருவி என்று சீரியலில் நடித்திருந்தார்.

நடிகர் அஸ்வின் காதல் ஒன்று கண்டேன் என்ற குறும்படத்தில் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதில் இடம் பெற்ற கண்ணவிசி கண்ணவிசி என்ற பாடல் பெரிய பிரபலமானது. இந்த வருடம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகர் அஸ்வின் போட்டியாளராக பங்கேற்றார் அதேபோல் கோமாளி புகழ் சிவாங்கி போன்றவர்கள் பெரிதும் பக்கபலமாக இருந்தனர் அத்துடன் சிவாங்கி,புகழ், அஸ்வின் மூவருடைய காம்போ ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வின் பலதரப்பட்ட உணவுகளை சமைத்து அயல்நாட்டு உணவுகள் வித்தியாசமான உணவுகளை சமைத்து அசத்தியிருந்தார்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அஸ்வினுக்கு நிறைய படவாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. கதைகளை கவனமாக தேர்ந்து எடுக்கும் அஸ்வின் தற்பொழுது தமிழ் படம் ஒன்றில் நடித்து கொண்டு இருக்கிறார் அந்த படத்தில் அவரது நண்பர் குக் வித் கோமாளி புகழ் நடிக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். நடிகர் அஸ்வினுக்கு பெண் ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் தான் அதிக லைக்ஸ் அள்ளி குவித்துள்ளனர்.

அஸ்வின் சரியான கதைகளை தேர்ந்து எடுத்து நடித்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்கு கிடைத்த இன்னொரு மேடி என்று சொல்லலாம்.

Exit mobile version