Home NEWS OPSஐ பார்த்து தேனி மாவட்ட சிங்கம் தமிழ்நாட்டின் தங்கம் என்று அதிமுக தலைமை...

OPSஐ பார்த்து தேனி மாவட்ட சிங்கம் தமிழ்நாட்டின் தங்கம் என்று அதிமுக தலைமை அலுவகத்தில் எழும்பிய கோஷம்..!!! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

opaneerselvam in admk office

தமிழகத்தில் மிகப் பலமான கட்சி என்று கருதப்பட்ட அதிமுக ஜெயலலிதா அவர்கள் மறைந்தும் கட்சியில் சில சலசலப்புகள் வந்தாலும் அதனை சமாளித்து ஆட்சியையும் நடத்தி வந்தனர்.

சசிகலா அவர்கள் அக்ரஹாரா சிறைக்கு சென்றபின் அதிமுகவை வழிநடத்தி சென்றது ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான். ஓரளவிற்கு கட்சியை சரி செய்து கொண்டு சென்று விட்டார்களே என்று பலரும் ஆச்சரியப்படும் நிலையில் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வெளிவந்த நாளில் இருந்து ஆரம்பித்தது குழப்பம்.

சசிகலா சிறையை விட்டு வந்தவுடனே அதிமுகவில் பிளவு ஏற்படும் என்றெல்லாம் பேசத் தொடங்கினார்கள் ஆனால் அமைதி காத்த சசிகலா தற்பொழுது நான் மீண்டும் அரசியலில் தொண்டர்களின் நலனுக்காக வருவேன். நீண்ட நாட்களாக கட்சிக்காக பாடுபட்ட தொண்டர்களை எப்படி கட்சியை விட்டு தூக்கலாம் என்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார் சசிகலா.

சசிகலாவுடன் உரையாடி வந்த அத்தனை பேரையும் நேற்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு கட்சியிலிருந்து நீக்கி இனி யாரேனும் அதிமுகவில் இருந்து சசிகலாவிடம் பேசினால் உடனே கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என்று ஆலோசனைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்கள்.

இபிஎஸ் ஓபிஎஸ் இடையே இருந்த சில கருத்து வேறுபாடுகள் ஓரளவிற்கு அவர்களை பேசி சுமூகமான முடிவிற்கு தற்போது வந்திருக்கும் நிலையில் சசிகலா மீண்டும் வருகிறேன் என்று சொன்னது பெரும் பரபரப்பை அரசியல் வட்டத்தில் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ பன்னீர்செல்வம் வந்த போது அங்கு கூடியிருந்த பெண் தொண்டர்கள் தேனி மாவட்ட சிங்கம் தமிழ்நாட்டின் தங்கம் என்று ஓபிஎஸ் அவர்களை பார்த்து கோஷமிட்டு உள்ளனர்.

கோஷம் எழுப்பியவர்களை வரை அழைத்து இங்கு எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவை மட்டுமே வாழ்த்தி கோஷமிட வேண்டும் தவிர வேறு யாரையும் வாழ்த்தி இங்கு கோஷம் எழுப்பக்கூடாது என்று கேட்டுக்கொண்டார் ஓபிஎஸ்.

Exit mobile version