Home CINEMA NEWS மீண்டும் ஒரு விஜய் டிவி ஜோடிக்கு திருமணம் முடிந்தது ..திருமண புகைப்படங்கள் இதோ ..

மீண்டும் ஒரு விஜய் டிவி ஜோடிக்கு திருமணம் முடிந்தது ..
திருமண புகைப்படங்கள் இதோ ..

விஜய் தொலைக்காட்சியில் நடித்த பல ஜோடிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். விஜய் டிவியில் நடித்தாலே அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கேலி கிண்டல் செய்யும் அளவிற்கு விஜய் டிவியில் பல பிரபலமான ஜோடி ஜோடிகள் உள்ளன.

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த செந்தில்-ஸ்ரீஜாவை தொடர்ந்து ராஜா ராணியில் நடித்த சஞ்சீவ் ஆலியா வரை நிறைய ஜோடிகள் இதில் திருமணம் வரை சென்று உள்ளனர்.

அந்த வரிசையில் சிப்பிக்குள் முத்து என்ற தொடரில் நடித்த ஒரு ஜோடி தற்பொழுது திருமணம் செய்துள்ளது. சிப்பிக்குள் முத்து தொடரில் முக்கிய ஜோடியாக நடித்தது சம்யுக்தா-விஷ்ணுகாந்த் ஜோடி. இந்த சீரியல் ஒரு சில மாதங்களே ஓடியது.

ஒரு சில மாதங்களிலே இந்த இரண்டு ஜோடிக்கும் காதல் வந்துவிட்டது . இரண்டு பேரும் காதலிக்கிறோம் என்ற அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டது. அதனை தொடர்ந்து சிப்பிக்குள் முத்து முடிந்த பிறகு தற்பொழுது விஷ்ணுகாந்த் ஜீ தமிழில் ஒரு முக்கிய சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

தற்பொழுது முத்தழகு சீரியலில் நடித்து வருகிறார். இருவரும் சீரியலில் பிஸியாக இருக்கும் போது இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரல்ஆகி உள்ளன. இதோ அந்த புகைப்படம் .

Exit mobile version