Home NEWS இனி உணவகங்கள் பகல் 12 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி!!! தமிழக அரசு அறிவித்த ...

இனி உணவகங்கள் பகல் 12 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி!!! தமிழக அரசு அறிவித்த புதிய கொரோனா கட்டுப்பாடுகள்.. விபரம் உள்ளே…

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மே 1 முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு 10 மணி முதல் காலை 4:00 மணி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

மேலும் நோய் பரவல் அதிகரித்து வருவதால் மே மாதம் 6 தேதி அதிகாலை 4 மணி முதல் 20ஆம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை நேற்று இரவு தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

அனைத்து அரசு தனியார் அலுவலகங்களில் அதிகபட்சம் 50% பணியாளர்களுக்கு இயக்க அனுமதிக்கப்படுகிறது.பயணியர் மெட்ரோ ரயில் தனியார் அரசு பஸ்கள் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இதைத் தவிர தனியாக செயல்படும் மளிகை பலசரக்கு மற்றும் காய்கறி விற்பனை கடைகள் மட்டும் ஏசி வசதி அல்லாமல் பகல் 12 மணி வரை இயக்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும்.

மளிகை பலசரக்கு மற்றும் காய்கறி கடைகளை தவிர இதர கடைகள் திறக்க அனுமதி இல்லை.
மருந்துகள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும் தேனீர் கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படலாம்.


உள் அரங்கங்கள் மற்றும் திறந்தவெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 பேருக்கு மேல் அனுமதி இல்லை.


ஏற்கனவே நகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
சனிக்கிழமைகளில் மீன் மார்க்கெட், கோழி இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இதைத் தவிர ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் தொடரும்.
எனவே தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

Exit mobile version