Home NEWS மொத்த தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி இது தான்..!!! குடிசை வீட்டில் இருந்து தமிழக...

மொத்த தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி இது தான்..!!! குடிசை வீட்டில் இருந்து தமிழக சட்டசபைக்கு செல்ல இருக்கும் கம்யூனிஸ்ட் வேட்பாளர். குவியும் வாழ்த்துக்கள்.

marimuthu cpi candidate thiruthuraipoondi

தமிழக சட்டசபைத் தேர்தலில் முக்கியமாக கவனிக்கப்பட்ட வேட்பாளர்கள் வெற்றியில் இந்த எளிமையான வெற்றியும் ஒன்று. பணம் உள்ளவர்கள் தான் தேர்தலில் ஜெயிக்க முடியும் தேர்தலில் நிற்க முடியும் என்ற எண்ணத்தை தூக்கி வீசிவிட்டு எளிமையான ஒருவர் மக்களுக்காக சேவை செய்ய முடியும் மக்கள் நினைத்தால் என்பதை கருத்தில் கொண்டு தமிழக சட்டசபை தேர்தலில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வேட்பாளராக நின்றார் மாரிமுத்து.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் காடுவாகுடி என்ற கிராமத்தை சார்ந்தவர் தான் மாரிமுத்து. இவர் விவசாய குடும்பத்தை சார்ந்தவர் தந்தை இறந்த பிறகு விவசாய கூலி வேலைக்கு சென்று பிகாம் வரை படித்து முடித்து இருக்கிறார். ஒரு கூரை வீட்டில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் மாரிமுத்து அவர்கள் வீடு கஜா புயலில் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டதாம்.

சென்னையிலிருந்து வீடுகட்டி தருகிறேன் என்று பட்டியல் எடுத்து கொண்ட நிறுவனத்தில் மாரிமுத்து பெயரும் இருந்தது ஆனால் மாரிமுத்து அந்த பகுதியில் வாழும் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு உதவி செய்யுங்கள் என்னுடைய பெயரை வேண்டுமால் லிஸ்டில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதன்பின் கூரைக்கு மேல் தார்ப்பாய் விரித்து வாழ்ந்து வந்துள்ளார் மாரிமுத்து.

சிறு வயதில் இருந்தே கம்யூனிஸ்ட் கட்சியின் மீது மரியாதை கொண்ட அவர் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஒன்றாக சேர்ந்து அவரும் குரல் கொடுத்து வந்தார். திருத்துறைப்பூண்டி தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியில் கடுமையாக உழைத்தவர்களில் இவரும் ஒருவர்.

கூரை வீட்டில் எளிமையான வாழ்க்கையை நடத்திவரும் ஏழை எளிய வேட்பாளரான மாரிமுத்து தமிழக சட்டசபைக்கு சென்றால் ஏழை மக்களின் கஷ்டங்களை எடுத்துக் கூறலாம் என்று முடிவுசெய்த கம்யூனிஸ்ட் கட்சி அவரை வேட்பாளராக தேர்ந்தெடுத்து தமிழக சட்டசபை தேர்தலில் திருத்துறைப்பூண்டி பகுதியில் நிறுத்தியது. திருத்துறைப்பூண்டி தொகுதியில் அவருக்கு போட்டியாக அதிமுகவை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரும், நாம் தமிழர் கட்சியை சார்ந்த வேட்பாளர் ஒருவரும் நின்றார்கள்.

மாரிமுத்து அவர்கள் 97092 வாக்குகள் பெற்று 30 ஆயிரத்திற்கும் மேல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திருமணத்திற்கு முன் ஒரு டூவீலர் கூட இவரிடம் இல்லையாம் திருமணம் முடிந்த பிறகுதான் டூவீலர் வாங்கினாராம். குடிசை வீடு 33 ஆயிரம் விலைமதிப்புள்ள வயல், மூன்று பவுன் நகை, வங்கியில் வைத்திருக்கும் 58 ஆயிரம் ரூபாய், தேர்தல் செலவுக்காக கையில் வைத்திருந்த மூவாயிரம் ரூபாய் மட்டுமே இவரிடம் இருந்தது. இந்த விவரங்களை தான் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருக்கிறார். இவருக்கு கிடைத்த வெற்றி ஒரு சாதாரண ஏழை எளிய நபருக்கு கிடைத்த வெற்றி.

தமிழ்நாடு கொண்டாட வேண்டிய வெற்றிகளில் மாரிமுத்து அவர்களின் வெற்றியும் ஒன்று வாழ்த்துக்கள் மாரிமுத்து சார்.

Exit mobile version