Home CINEMA NEWS ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட நயன்தாராவின் காதல் கணவர்..!!! நயன்தாரா அணிந்து இருக்கும் டாப்ஸ் மேல் கண்...

ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட நயன்தாராவின் காதல் கணவர்..!!! நயன்தாரா அணிந்து இருக்கும் டாப்ஸ் மேல் கண் வைத்த ரசிகர்கள்.

nayanthara in Thailand the siam hotel

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவின் இந்த மாதம் தான் அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் அவர்களுடன் திருமணம் நடந்து முடிந்தது.

மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் பிரம்மாண்டமான முறையில் நயன்தாராவின் திருமணம் நடந்து முடிந்தது. பலத்த பாதுகாப்புடன் நடந்த திருமணத்திற்கு விஐபிகள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.
நயன்தாராவின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை பல கோடி ரூபாய்க்கு NETFLIX OTT தளத்திற்கு விற்றனர்.

நயன்தாராவின் பெற்றோர்கள் திருமணத்திற்கு வரவில்லை என்று கூறி வந்த நிலையில் திருமணம் முடித்த கையோடு சில நாட்களில் தனது கணவரை கேரளாவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் நயன்தாரா. கேரளாவில் தனது பெற்றோர்களுடன் நேரத்தை செலவிட்டு வந்தனர். புதுமண தம்பதிகள் இருவரும் கேரளாவில் அவர்களது நண்பர்களை சந்தித்து வெளியிடங்களில் சுற்றி வந்தனர்.

திருமணம் முடிந்த பிறகு சில நாட்கள் கழித்து மஞ்சள் தாலி உடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட நயன்தாரா. சமீபத்தில் தனது காதல் கணவருடன் ஹனிமூனுக்கு தாய்லாந்து சென்று உள்ள நயன்தாரா அங்கு உள்ள THE SIAM ஹோட்டலில் தங்கி உள்ளனர். நயன்தாரா தாய்லாந்தில் தங்கி உள்ள ஹோட்டல் ஒரு நாள் வாடகை மட்டும் இந்திய மதிப்பிற்கு ஒரு லட்சத்தி 18 ஆயிரத்தி 117 ரூபாய் (118,117.60 ).

விக்கி நயன்தாரா ஜாலியாக தங்களது பொழுதை கழித்து வருகின்றனர். நயன்தாராவை அவரது கணவர் விக்னேஷ் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா அணிந்திருக்கும் டாப்ஸ் எங்கே எடுத்தாங்க செம்ம அழகா இருக்கே இந்த டாப்ஸ் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Exit mobile version