Home CINEMA NEWS மூக்குத்தி அம்மன் திரைவிமர்சனம்.

மூக்குத்தி அம்மன் திரைவிமர்சனம்.

mookuthi amman movie review

மூக்குத்தி அம்மன் ரசிகர்களால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட படம். ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த LKG என்ற படம் மாபெரும் வெற்றியைப் பெற்று மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்து அவர் இயக்கி நடிக்கும் படம் மூக்குத்தி அம்மன் இந்த படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருக்கிறார். இந்தப் படத்தை திரையரங்கில் வெளியிடுவதற்காக பாலாஜி காத்திருந்தார் ஆனால் காலச் சூழ்நிலையால் இந்தப்படம் OTTதளத்திற்கு கை மாற்றப்பட்டது.

தீபாவளி விருந்தாக மூக்குத்தி அம்மன் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம் வாங்க.

ஆர் ஜே பாலாஜி LKG கொடுத்த வெற்றிக்குப் பிறகு மக்கள் அனைவரும் இவரிடம் பெரிதாக எதிர்பார்த்தார்கள். மக்கள் எதிர்பார்த்தபடி ஆர் ஜே பாலாஜி இந்தப் படத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி கூறியுள்ளார் ஆனால் அது எடுபடாமல் போனது என்பது தான் உண்மை.

ஆர் ஜே பாலாஜி சமூகப் பிரச்சினையை தனது படங்களில் மூலமாக மக்களுக்கு எடுத்துரைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். எல் கே ஜி யில் அரசியல் பற்றி பேசிய பாலாஜி மூக்குத்தி அம்மன் படத்தில் கடவுள் பெயரை வைத்துக்கொண்டு ட்ரஸ்ட் ஆரம்பித்து கோடி கோடியாய் சம்பாதிக்கும் போலிச் சாமியார்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதற்காகவே படமாக எடுத்துள்ளார்.

நயன்தாரா மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளார். ஆர் ஜே பாலாஜி குடும்பத்தின் குல தெய்வமாக காட்சி கொடுப்பதிலும் சரி அவர் வரும் அனைத்து காட்சிகளும் கச்சிதமாக இருந்தது. இந்த காலத்தில் கடவுள் பெயரை வைத்து வியாபாரம் செய்யும் கோஷ்டிகளுக்கு இந்தப்படம் ஒரு சவுக்கடி. அதுமட்டுமல்லாமல் பிரச்சனைகளை வாழ்வில் சந்திக்க முடியாமல் நொந்து போகி சாமியாரிடம் சென்று பணம் கொடுத்து ஏமாறும் மக்கள் இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். வசனங்கள், நயன்தாராவின் நடிப்பு மற்றும் பாலாஜியின் அம்மாவாக ஊர்வசியின் நடிப்பு தனித்துவம். மீனா, ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகைகள் அம்மன் வேடத்தில் நடித்ததற்கு பிறகு நயன்தாரா அம்மன் வேடத்தில் கனகச்சிதமாக நடித்துள்ளார்.

படத்தின் பிளஸ்:

கடவுள் பெயரை பயன்படுத்தி போலி சாமியார்கள் எப்படி எல்லாம் சம்பாதிக்கிறார்கள் என்று சொன்ன தைரியத்திற்கு ஆகவே ஆர் ஜே பாலாஜி பாராட்டலாம்.

நயன்தாராவின் அலட்டல் இல்லாத நடிப்பு.

ஊர்வசியின் கலகலப்பான நடிப்பு.

படத்தின் மைனஸ்:

கதைக்களம் புதிதாக இருந்தாலும் சற்று அழுத்தம் இல்லாதது போல் தோன்றுகிறது.

பல இடத்தில் லாஜிக் மீறல்கள்.

மொத்தத்தில் இந்த மூக்குத்தி அம்மன் நிச்சயமாக மக்கள் பார்க்க வேண்டிய படம் ஆனால் பெரிய வெற்றிப் படம் என்று சொல்ல முடியவில்லை.

ரேட்டிங் – 2.75 / 5

இந்த படத்தை பார்த்த பின் உங்கள் கருத்தை கமெண்ட் செய்யுங்கள்.

Exit mobile version