Home CINEMA NEWS இணையத்தில் சுற்றி வரும் பிக்பாஸ் புகழ் ஜூலியின் கவர்ச்சி புகைப்படம்..!!!

இணையத்தில் சுற்றி வரும் பிக்பாஸ் புகழ் ஜூலியின் கவர்ச்சி புகைப்படம்..!!!

julie 24x7tamil

ஜூலி ஜல்லிக்கட்டு பிரச்சனையின் போது மெரினாவில் தைரியமாக சக மாணவ மாணவிகளுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர். மெரினாவில் கோஷங்கள் எழுப்பி அனைவர் பார்வையும் அவர் மீது திருப்பியவர். போராட்டத்தில் ஜூலி கோஷங்களை எழுப்பிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. யார் இந்த பெண் என்று ஜூலியை இளைஞர்கள் தேடத் தொடங்கினார்.

image courtesy : Galatta

ஜல்லிக்கட்டுக்கு போராட்டத்திற்கு பிறகு விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதனால் இன்னும் பிரபலமான ஜூலி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் சில படங்களில் கமிட் ஆனார். அம்மன் தாயி என்ற படத்தில் அம்மனாக நடித்திருந்தார் ஜூலி. அந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான பின்பு ரசிகர்கள் ஜூலியை கலாய்க்க ஆரம்பித்தனர். திடீரென்று நான் கட்சி ஆரம்பிக்க போகிறேன் விரைவில் என்றெல்லாம் வீடியோக்கள் வெளியிட்டார் அதன்பின் என்ன காரணமோ ஜூலி அரசியல் பற்றி பேசுவதை தவிர்த்து வந்தார்.

தற்போது சில படங்களில் நடித்து வரும் ஜூலி மாடலிங் போட்டோ ஷூட் புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு வருவார். அதில் இன்று அவர் வெளியிட்ட புகைப்படம் சற்று மோசமாகவே இருந்தது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜூலியா இப்படியெல்லாம் போஸ் கொடுப்பது என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர். ஒரு நேரத்தில் போராளியாக பார்த்த பெண்ணை தற்பொழுது படவாய்ப்பிற்காக இப்படி மாறிவிட்டாரே என்று தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version