Home CINEMA NEWS மகளுடன் எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படத்தை வெளியிட்ட மீனா..!!! தெறி பேபி நைனிகாவா இது..!!!

மகளுடன் எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படத்தை வெளியிட்ட மீனா..!!! தெறி பேபி நைனிகாவா இது..!!!

meena daughter nainika thalpathy vijay theri baby

நடிகை மீனா நெஞ்சங்கள் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் நடித்து அனைவரின் மனதையும் நெகிழச் செய்தார்.

அப்போது தொடங்கிய அவருடைய திரைப்பயணம் இன்றுவரை முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. மீனா ரஜினி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பின் ரஜினிக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தில் மாமா பெண்ணாக நடித்திருந்தார்.

மீனாவின் ஹோம்லியான தோற்றம் இவருக்கு படவாய்ப்புகள் தேடிவர முக்கியகாரணமாக இருந்தது. தல அஜித்துடன் நிறைய படங்களில் நடித்து வந்த மீனா தளபதி விஜயுடன் நடிக்கவில்லையே என்கின்ற வருத்தம் அவருக்கு இருந்து வந்தது அதனால் ஷாஜகான் படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார் மீனா.

தனது மகளை தன்னைப் போல ஹீரோயினாக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் மீனா முதற்கட்டமாக தனது மகள் நைனிகாவை அட்லி இயக்கத்தில் தளபதி விஜயின் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடிக்க வைத்திருந்தார்.

உண்மையாகவே விஜய்யின் மகள் போலவே நைனிகா நடித்து அசத்தி இருந்தார். நைனிகாவின் அக்காவின் சுட்டித்தனமான நடிப்பு ரசிகர்களை பெரிதாக கவர்ந்தது. குறிப்பாக விஜய் நைனிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

அதன்பின் சில படங்களில் நடித்த மோனிகா தனது படிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் தனது மகள் நைனிகா உடன் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை மீனா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் அம்மாவை கண்டிப்பாக மிஞ்சிடுவார் என்று புகழ்ந்து வருகின்றனர்.

Exit mobile version