Home NEWS MGR அவர்களுக்கு கிட்னி கொடுத்த அவரது அண்ணன் மகள் லீலாவதி மரணம்..!!! அதிர்ச்சியில் குடும்பத்தினர்.

MGR அவர்களுக்கு கிட்னி கொடுத்த அவரது அண்ணன் மகள் லீலாவதி மரணம்..!!! அதிர்ச்சியில் குடும்பத்தினர்.

mgr niece leelavathy died

புரட்சிக் கலைஞர் எம்ஜி ஆர் இவர் மறைந்தும் இவருடைய நினைவுகள் மற்றும் சேவைகள் தமிழ்நாட்டில் மறையாமல் பேசப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் அவர்களின் சிறப்பான ஆட்சியை கொடுக்க தான் அனைவரும் முயற்சி செய்து வருகிறார்கள் இந்நிலையில் எம்ஜிஆர் அவர்கள் சீரியஸாக இருந்த நேரத்தில் கிட்னி மாற்று சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தது அப்போது எம்ஜிஆர் அவர்களின் அண்ணன் மகள் லீலாவதி அவர்கள் எம்ஜிஆருக்கு சிறுநீரகம் கொடுத்து உதவினார்.

mgr leelavathy

1984 டிசம்பர் மாதத்தில் எம்ஜிஆர் அவர்களுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருத்தார்.

எம்ஜிஆர் அவர்களுக்கு ஆப்ரேஷன் செய்ய கிட்னி தேவைப்பட்டதால் எம்ஜிஆர் அவர்களின் அண்ணன் மகள் லீலாவதி என்பவர் மற்றும் லீலாவதியின் சகோதரர் ராஜேந்திரன் இருவரும் கிட்னி கொடுக்க முன் வந்தார்களாம்.

லீலாவதிக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் ஒரே ரத்தம் B + என்பதால் மருத்துவர்கள் லீலாவதியின் கிட்னியை எடுத்து எம்ஜிஆருக்கு பொருத்தி இருந்தார்களாம். லீலாவதி தான் கிட்னி கொடுத்தார் என்பதை எம்ஜிஆரிடம் மருத்துவர் மற்றும் குடும்பத்தினர் கூறவே இல்லையாம் ஒரு நாள் எம்ஜிஆர் அவர்கள் செய்தி நாளிதழை எடுத்துப் படித்துக் கொண்டிருக்கும் போது அதில் எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதிக்கு நன்றி என்று செய்தி வந்திருப்பதை படித்தாராம் MGR . படித்தவுடன் ஏன் இப்படி நீலாவதி செய்தார் என்று கோபட்டாராம் உடனே தனது அண்ணனை அனுப்பி லீலாவதி அழைத்து வருமாறு கூறினாராம் அதன்பின் லீலாவதி உடன் நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டாராம் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் அவர்களின் அண்ணன் மகள் லீலாவதி வயது 72 சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அதன்பின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்ததால் வீடு திரும்பினார் ஆனால் எதிர்பாராத விதமாக நேற்று இரவு லீலாவதியின் உயிர் பிரிந்தது.

Exit mobile version