Home CINEMA NEWS மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனிடம் பிகினி புகைப்படம் கேட்ட ஏடாகூட ரசிகர்…!!! புகைப்படம்...

மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனிடம் பிகினி புகைப்படம் கேட்ட ஏடாகூட ரசிகர்…!!! புகைப்படம் அனுப்பி அதிர்ச்சி கொடுத்த நடிகை..!!!

malavika mohanan fans chat section

மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். முதல் படத்திலேயே யாரடா இந்த புது பொண்ணு என்று உற்றுநோக்கியனார்கள் ரசிகர்கள்.சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்த மாளவிகா மோகன் சிறிய கதாபாத்திரம் என்றாலும் அனைவரையும் எளிதில் கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் சாருலதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய்க்கு ஜோடியாக இரண்டாவது படத்தில் நடித்த மாளவிகா தனது அடுத்த ஹீரோ முன்னணி நடிகராக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு தனுஷ் அவர்களின் பிறந்த நாளன்று தனுஷ் இடமே உங்கள் படத்தில் நடிக்க நான் ஆசைப்படுகிறேன் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று ட்விட்டர் வழியாக கேட்டார் அதற்கு தனுஷும் தாராளமா என்று கூறியிருந்தார். சில மாதங்கள் கழித்து கார்த்திக் நரேன் இயக்கிய மாறன் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.

மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதை விட CHEWING GUM போட்டு படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை மென்று கொண்டே இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை போட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் மாளவிகா. தற்பொழுது ஹிந்தி படம் ஒன்றில் நடித்துக் கொண்டு இருக்கிறார். ரசிகர்களிடம் எந்த ஒரு கேள்வியாக இருந்தாலும் தன்னிடம் கேட்கலாம் என்று நேற்று கூறியிருந்தார் ரசிகர்கள் அனைவரும் அவரது அடுத்த படங்கள் பற்றியும், தங்களது ஹீரோ பற்றியும் கேட்டு வந்தார்கள் அப்போது ஒரு ரசிகர் ஏடாகூட கேள்வி ஒன்றை கேட்டார்.

நீங்கள் கடைசியாக புகைப்படம் எடுத்த பிகினி புகைப்படத்தை உங்கள் ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கேட்டதற்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் பிகினி புகைப்படத்தை எடுத்து பதிவிட்டு இருந்தார் மாளவிகா.

இதனைப் பார்த்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதுபோன்ற தேவையில்லாத விஷயங்களை தவிர்ப்பது நல்லது என்று பிகினி புகைப்படம் கேட்டவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

Exit mobile version