Home NEWS அரசு மருத்துவமனையில் 10 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிர் இழப்பு..!!! கதறி அழுத பெற்றோர்கள்.

அரசு மருத்துவமனையில் 10 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிர் இழப்பு..!!! கதறி அழுத பெற்றோர்கள்.

bhandara hospital fire incident

மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு.

மகாராஷ்டிராவில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது அங்கு பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் மையம் அமைந்துள்ளது.

அங்கு 17 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்காக வைக்கப்பட்டு இருந்தது இந்நிலையில் நேற்று அதிகாலை 1 .30 மணிக்கு அந்த பிரிவில் தீப்பற்றி எரிவதை பணியில் இருந்த செவிலியர் ஒருவர் பார்த்துள்ளார் அவர் அளித்த தகவலின்படி அங்கிருந்த ஒரு மருத்துவர் 15க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் உடனடியாக அந்த வார்டுக்கு சென்று குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 7 குழந்தைகளை சிறிய அளவிலான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டது மீதி இருந்த 10 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிர் இழந்தது. அந்த குழந்தையின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கருகிய உடலை பார்த்து கதறி அழ தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற தீயணைப்பு படையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். குறைந்த மின்னழுத்த காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தை நேரில் பார்த்த மகாராஷ்டிரா முதல்வர் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி வந்தார் அதனை தொடர்ந்து உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் 10 பச்சிளம் குழந்தைகள் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version