Home NEWS LPG சிலிண்டரை தோளில் சுமந்து டெலிவரி செய்து படிக்க வைத்த தந்தை..!!! 23 வயதில் இந்திய...

LPG சிலிண்டரை தோளில் சுமந்து டெலிவரி செய்து படிக்க வைத்த தந்தை..!!! 23 வயதில் இந்திய கடற்படை அதிகாரியான கோவை இளைஞன்..!!! குவியும் வாழ்த்துக்கள்.

lpg cylinder delivery father son

தினந்தோறும் சினிமா செய்திகள் மற்றும் ஹீரோ பற்றிய செய்திகள் நாம் சமூக வலைதளங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரு ரியல் ஹீரோவை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

தினம் தினம் தன் தோளில் LPG சிலிண்டரை சுமந்து வீடு வீடாக சென்று டெலிவரி செய்து வந்து கஷ்டப்பட்டு தனது மகனைப் படிக்க வைத்து இன்று தன் மகன் விக்னேஷை கடற்படை அதிகாரி ஆக்கியுள்ளார் இந்த ரியல் ஹீரோ.

தனது வறுமையை வெளியில் காட்டாமல் தன்னுடைய மகன் நன்றாகப் படித்து சமூகத்தில் ஒரு பெரிய அந்தஸ்தைப் பெறவேண்டும் என்பதற்காக எத்தனையோ பெற்றோர்கள் தனது கஷ்டத்தையும் மறைத்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படியாவது தன் மகனை இன்ஜினியர், டாக்டர் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் கோயம்பத்தூரில் இருந்து தன் மகனை கடற்படை அதிகாரியாக ஆக்க வேண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று LPG சிலிண்டரை தோளில் சுமந்து கொண்டு வீடு வீடாக டெலிவரி செய்து படிக்க வைத்துள்ளார் இந்த தந்தை.

மகன் விக்னேஷ் கடற்படைத் தளபதி இடமிருந்து பதக்கமும் வென்றுள்ளார்.

Officer Preparing Academy Training Commando Thiru . Esen

இவருக்கு உறுதுணையாக இருந்து பயிற்சி கொடுத்த OFFICER PREPARING ACADEMY TRAINING COMMANDO திரு ஈசன் அவர்களிடம் கேட்டதற்கு கோயம்புத்தூரை சேர்ந்த விக்னேஷ் வயது 23 தனது கனவை நினைவாக்க பயிற்சிகளை எங்களிடம் மேற்கொண்டார். எங்களுடைய மாணவர் கடற்படை அதிகாரி ஆவது எங்களுக்கு சந்தோசம் என்று தனது மாணவனை நினைத்து பெருமிதம் கொண்டார்.

இணையத்தில் தற்பொழுது இந்த தந்தை மற்றும் இளைஞருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Exit mobile version