Home NEWS காலாவதியான LIC பாலிசிகளை மார்ச் 6ஆம் தேதி வரை புதுப்பிக்கலாம் எல்ஐசி நிறுவனம் அறிவிப்பு.

காலாவதியான LIC பாலிசிகளை மார்ச் 6ஆம் தேதி வரை புதுப்பிக்கலாம் எல்ஐசி நிறுவனம் அறிவிப்பு.

lic policy renewal date

காலாவதியான பாலிசிகளைப் புதுப்பித்துக்கொள்ள எல்ஐசி நிறுவனம் மார்ச் 6ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரீமியம் செலுத்த முடியாமல் காலாவதியான பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள எல்ஐசி நிறுவனம் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த அவகாசம் கடந்த 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 6-ஆம் தேதியுடன் முடிகிறது.

இதன்படி பாலிசிதாரர்கள் தாங்கள் கடைசியாக பாலிசிக்கான பிரீமியம் செலுத்திய தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை காலாவதி ஆகி உள்ளஇதன்படி பாலிசிதாரர்கள் தாங்கள் கடைசியாக பாலிசிக்கான பிரீமியம் செலுத்திய தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை காலாவதி ஆகி உள்ள பாலிசிகளை புதுப்பிக்க லாம் இதற்கு மருத்துவ பரிசோதனை எதுவும் தேவைப்படாது.

ரூபாய் ஒரு லட்சம் வரையிலான பிரிவிற்கான தாமதம் கட்டணத்தில் 20 சதவீதமும் ரூபாய் ஒரு லட்சம் முதல் ரூபாய் 3 லட்சம் வரையில் அனுப்பியதற்கு 25 சதவீதமும் ரூபாய் 3 லட்சம் மற்றும் அதற்கு மேல் உள்ள பிரீமியத் 30 சதவீதமும் சலுகை வழங்கப்படும். பாலிசிதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version