Home NEWS 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட விமானம் 4 நிமிடத்திலே நடுவானில் மாயம்..!!! பிராத்தனை செய்து...

50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட விமானம் 4 நிமிடத்திலே நடுவானில் மாயம்..!!! பிராத்தனை செய்து வரும் மக்கள்.

indonesian flight missed contact

இந்தோனேசியாவில் 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விமானம் நடுவானில் மாயமாகி உள்ளது செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்டாவில் இருந்து இந்திய மணிப்படி இன்று மதியம் 12 மணிக்கு ஸ்ரீவிஜய ஏர் நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது. போயிங் 737 – 524 ரக விமானமான இது போண்டியநாக் நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

ஐந்து சிறு வயது குழந்தைகள் மற்றும் ஒரு குழந்தையுடன் மொத்தம் 59 பயணிகள் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது ஜகார்டாவின் வடக்கு கடற்கரை பகுதியை கடந்தபின் விமானம் தொடர்பை இழந்து விட்டதாம்.

விமானம் புறப்பட்ட 4 நிமிடங்களுக்கு பின் ஒரே நிமிடத்தில் 10,000 அடி உயரம் வரை சென்று தொலைந்து விட்டதாக பிளைட் ரேடார் 24 தகவல் வெளியிட்டுள்ளது.

11350 அடி உயரத்தில் விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது தான் கடைசியாக தொடர்பில் இருந்ததாம் . நடுவானில் விமானம் திடீரென மாயமானது இந்தோனேசியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விமானம் 737 மேக்ஸ் அல்ல, போயிங் மாடல் 2019 மார்ச் முதல் கடந்த டிசம்பர் வரை இரண்டு ஆபத்தான விபத்துக்களைத் தொடர்ந்து தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க அனைவரும் பத்திரமாக இருக்கவேண்டும் உயிருடன் மறுபடி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கிவிட்டார்கள் மக்கள்.

ஒரு சிலர் விமானம் மின்னல் போல் கடலில் விழுந்து தண்ணீரில் வெடித்தது என்று கூறி வருகின்றனர்.

விமானத்தைத் தேடுவதற்காக இந்தோனேசிய கடற்படை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் இந்தோனேசியாவை மட்டும் அல்லாமல் உலக நாடுகளையே உலுக்கியுள்ளது.

Exit mobile version