Home CINEMA NEWS பிரபல நடிகையுடன் DATING சென்ற 56 வயது முன்னாள் IPL தலைவர்…!!!தீயாய் பரவி வரும் புகைப்படங்கள்.

பிரபல நடிகையுடன் DATING சென்ற 56 வயது முன்னாள் IPL தலைவர்…!!!தீயாய் பரவி வரும் புகைப்படங்கள்.

sushmita sen datin with lalit modi

லலித் மோடி ஐபிஎல் முன்னாள் தலைவர். ரூபாய் 120 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக பிசிசிஐ புகார் அளித்தது அதன் அடிப்படையில் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.

கிரிக்கெட் சூதாட்டம் ஐபிஎல் முறைகேடு என்று அடுக்கடுக்காக புகார்களில் குற்றம் சாட்டப்பட்ட லலித்மோடி 1991 ஆம் ஆண்டு தன்னை விட 10 வயது அதிகமான மினல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். லலித் மினல் தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளை உள்ளது. மினல் 2000ஆம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டு 64 வயதில் கேன்சர் நோயால் இறந்தார் மினல்.

Lalit Modi Wife Meenal Modi

தற்பொழுது லலித்மோடிக்கு ஐம்பத்தி ஆறு வயது ஆகிறது. 56 வயதில் லலித்மோடி பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதாசென் அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

அதனை பார்த்த சினிமா ரசிகர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியிட்டு வந்தனர்.

புகைப்படங்கள் வெளியிட்ட சில மணி நேரங்களில் நாங்கள் திருமணம் செய்யவில்லை DATING சென்றுள்ளோம் திருமணம் ஒருநாள் நடக்கும் என்று கூறியிருந்தார்.

56 வயதான லலித்மோடி 46 வயதான பிரபல நடிகை சுஷ்மிதா விரைவில் திருமணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுஷ்மிதா சென் முதல்வன் மற்றும் ரட்சகன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version